முதல் படத்தை இயக்க லைகா ப்ரொடக்ஷனுடன் கையெழுத்திட்டார் தளபதி விஜய்யின் மகன்
தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் தனது முதல் திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்ற அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்நிலையில், அந்த படத்திற்கான ஒப்பந்தத்தில் தற்போது ஜேசன் சஞ்சய் கையெழுத்திட்டுள்ளார். இந்த திரைப்படம் கிரிக்கெட்டை மையாக கொண்டு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில், பல 'ஸ்டார்கிட்ஸ்', அதாவது, கோலிவுட்டில் உள்ள பிரபலங்களின் பிள்ளைகளும் இணையவுள்ளனர் என கூறப்படுகிறது. 2.0, பொன்னியின் செல்வன், கத்தி போன்ற பெரும் படங்களை தயாரித்த லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம், ஜேசன் சஞ்சய்யின் முதல் படத்திற்கு ஒப்பந்தமிட்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.