Page Loader
சரத்குமாரின் மாயி பட இயக்குநர் சூர்ய பிரகாஷ் மறைவு
அவரது திடீர் மறைவிற்கு நடிகர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்

சரத்குமாரின் மாயி பட இயக்குநர் சூர்ய பிரகாஷ் மறைவு

எழுதியவர் Venkatalakshmi V
May 27, 2024
01:03 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் சரத்குமார் நடிப்பில் உருவான மாயி, திவான் போன்ற படங்களை இயக்கிய கோலிவுட் இயக்குனர் சூர்ய பிரகாஷ் மாரடைப்பால் இன்று அதிகாலை காலமானார். மாணிக்கம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சூர்ய பிரகாஷின் இயற்பெயர் பாண்டியன் ஆகும். சூர்ய பிரகாஷ், சரத்குமார் நடிப்பில் வெளியான மாயி, திவான் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர். அவரது திடீர் மறைவிற்கு நடிகர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவில், சூர்ய பிரகாஷின் திடீர் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது என பதிவிட்டுள்ளார். இயக்குநர் சூர்ய பிரகாஷ் இறுதிச் சடங்கு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள சொந்த ஊரில் இன்று மாலை நடைபெற உள்ளது.

embed

இயக்குநர் சூர்ய பிரகாஷ் மறைவு

எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்யபிரகாஷ் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது... pic.twitter.com/vxgqBSPLQE— R Sarath Kumar (மோடியின் குடும்பம்) (@realsarathkumar) May 27, 2024