Page Loader
ரசிகர்களால் கோவில் கட்டி கொண்டாடப்பட்ட நடிகைகளின் பட்டியல்
கோவில் கட்டி கொண்டாடப்பட்ட கோலிவுட் நடிகைகள்

ரசிகர்களால் கோவில் கட்டி கொண்டாடப்பட்ட நடிகைகளின் பட்டியல்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 30, 2023
09:00 am

செய்தி முன்னோட்டம்

இரு தினங்களுக்கு முன்னர், நடிகை சமந்தாவிற்கு ஆந்திர இளைஞர் ஒருவர் கோவில் காட்டிவரும் செய்தி வைரலானது. சினிமா ரசிகன், தனது கனவுக்கன்னிகளுக்கு கோவில் காட்டும் கலாச்சாரம், நமது நாட்டில் புதியது அல்ல. இதற்கு முன்னரும் இதுபோல, பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. ஒரு சாமானிய ரசிகன், தான் கண்டு வியக்கும் ஒரு நடிகைக்கு தனது பிரியத்தை காட்ட, இந்த வழியை தேர்ந்தெடுக்கின்றனர். குஷ்பு: நடிகை குஷ்பூவிற்கு தான் முதல்முறையாக நம்மூர் வெறித்தனமான ரசிகர்கள், அந்த காலத்திலேயே கோவில் கட்டினார்கள். ஒருவேளை அவர்கள் துவக்கியது தான் இந்த கோவில் காட்டும் ட்ரெண்ட்-ஓ என்னமோ!! நமீதா: நடிகை நமீதாவுக்கு, 2008இல் கோவில் காட்டியுள்ளார் அவரின் ரசிகர். குஷ்புவிற்கு பிறகு, தமிழ்நாட்டில் கோவில் கட்டப்பட்டது நடிகை நமீதாவிற்கு தான்.

card 2

எல்லைகள் தாண்டி பரவும் கோவில் கட்டும் கலாச்சாரம்

ஹன்சிகா மோத்வானி: இவர் அறிமுகம் ஆன புதிதில், சின்ன குஷ்பூ என அழைக்கும் அளவிற்கு, குஷ்புவை போலவே இருந்தார். அதனால், அவருக்கும், குஷ்புவிற்கு கட்டியதை போல, மதுரையில் கட்ட எத்தனித்தார்கள், அவரின் ரசிகர்கள். ஆனால், அந்த முயற்சியை தடுத்துவிட்டார் ஹன்சிகா. நயன்தாரா: இவருக்கு இதனை காலம் கோவில் காட்டாமல் இருந்தால்தான் ஆச்சரியம். இவருக்கும் கோவில் காட்டியுள்ளனர் என செய்திகள் வந்தது. ஆனால், ஒருமுறை, கோவில் கட்டுவதற்கு இவரின் ரசிகர்கள், நயன்தாராவிடம் அனுமதி கேட்டதாகவும், அவர் அதை மறுத்துவிட்டதாகவும் கூட தெரிவிக்கப்பட்டது. நிதி அகர்வால்: 'ஈஸ்வரன்' படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நிதி அகர்வால். முதல் படத்திலேயே அவருக்கு ரசிகர் கூட்டம் ஏராளமாக சேர்ந்தது. அவரின் வெறித்தனமான ரசிகர்கள், அவருக்கு கோவில் காட்டியுள்ளனர்.