
திருமணத்திற்கு தயாரான நடிகை சுனைனா; சூசகமாக வெளியிட்ட புகைப்படம் வைரல்
செய்தி முன்னோட்டம்
நடிகை சுனைனா, தன்னுடைய காதலரை அறிமுகப்படுத்தி, அவரது கையை பிடித்திருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில், 'காதலில் விழுந்தேன்' படம் மூலமாக ஹீரோயினாக அடியெடுத்து வாய்த்த சுனைனா, அதன் பிறகு 'மாசிலாமணி','நீர் பறவை', 'தெறி' போன்ற படங்களில் நடித்தார்.
அவர் பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வாய்ப்புகள் கிடைக்காததால், தற்போது சில வெப் சீரீஸ்களில் நடித்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாகவே அவர் காதலித்து வருகிறார் எனவும், திருமணத்திற்கு தயாராகி விட்டார் எனவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
இந்த நிலையில் இன்று காதலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது திருமணத்தை உறுதி செய்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
சுனைனாவிற்கு விரைவில் திருமணம்
நடிகை சுனைனாவின் இன்ஸ்டா பதிவு? #Sunaina #NakkheeranStudio pic.twitter.com/4llnvEw6uH
— Nakkheeran Studio (@nstudioweb) June 5, 2024