NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / நடிகர் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
    நடிகர் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
    பொழுதுபோக்கு

    நடிகர் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

    எழுதியவர் Venkatalakshmi V
    September 07, 2023 | 02:39 pm 1 நிமிட வாசிப்பு
    நடிகர் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
    நடிகர் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு

    ராஜபாளையத்தில் விஜய குருநாத சேதுபதியாக பிறந்தவர், தற்போது ரசிகர்களால் VJS என்று அன்போடு அழைக்கப்படும் விஜய் சேதுபதி. ஒரு மனிதன், தன்னுடைய இலட்சியத்தை நோக்கி, சின்சியராகவும், விடாமுயற்சியுடனும், நேர்மையாகவும் உழைத்தால், பணமும், புகழும், அவனை தானாக வந்தடையும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு விஜய் சேதுபதி தான். நடிப்பின் மீது ஆர்வம் இருந்தாலும், குடும்ப சூழல் காரணமாக, கிடைத்த வேலையை செய்து வந்தார் விஜய் சேதுபதி. சேல்ஸ் மேன், கேஷியர் என சென்னையில் கிடைத்த வேலையை செய்து கொண்டே நடிக்க வாய்ப்பு தேடினார் விஜய் சேதுபதி. அதன்பின்னர் துபாயில் மார்க்கெட்டிங் துறையில் வேலை செய்து வந்தார். ஒரு கட்டத்தில், நடிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என துணிந்து இந்தியா திரும்பினார், விஜய் சேதுபதி

    பாலிவுட் தேடும் நடிகன்

    மாதம் சொற்ப வருமானம் கிடைக்கும் வேலைகள் செய்த VJS, தொடர்ந்து தன் சுயமுயற்சியால், பல படங்களில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். அதன் பின்னர், தன்னை தேடி வரும் நல்ல படங்களை, தானே தயாரிக்கவும் செய்தார். இதற்கிடையே, 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்திற்கு அவருக்கு தேசிய விருது கிடைத்ததும், இந்தியாவே அவரை திரும்பி பார்த்தது. தொடர்ந்து ஹிந்தி வாய்ப்புகள் அவர் கதவை தட்டவே, 'ஃபர்சி' என்ற வெப் தொடர் மூலம், பாலிவுட் பயணத்தை துவங்கினார். தற்போது, ஜவான் திரைப்படத்தில், ஷாருக்கானுக்கு வில்லனாகவும், அடுத்த படத்தில், கத்ரினா கைஃப்பிற்கு ஜோடியாகவும் நடிக்கும் விஜய் சேதுபதி, 21 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதோடு, அவரின் சொத்தின் மதிப்பு, 140 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    விஜய் சேதுபதி

    விஜய் சேதுபதி

    'ஜவான்' படத்தின் 'வந்த எடம்' பாடல் மேக்கிங் வீடியோ வெளியானது  ஷாருக்கான்
    வரும் ஆகஸ்ட் 11-இல் அமேசான் பிரைமில் வருகிறான் 'மாவீரன்' அமேசான் பிரைம்
    'குட் நைட்' மணிகண்டனின் அடுத்த படத்தினை கிளாப் அடித்து துவங்கி வைத்த விஜய் சேதுபதி இயக்குனர்
    ஜவான் திரைப்படத்தில் விஜய் நடிக்கிறாரா? ஸ்டண்ட் மாஸ்டர் சொன்ன தகவல் விஜய்
    அடுத்த செய்திக் கட்டுரை

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023