
சுதீப்பை தொடர்ந்து அரசியலில் இறங்குகிறாரா KGF யாஷ்?
செய்தி முன்னோட்டம்
கர்நாடக திரையுலகின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான கிச்சா சுதீப், அம்மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், தற்போதைய ஆளும் முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போவதாக ஏப்ரல் 5 அன்று அறிவித்தார்.
பசவராஜ் பொம்மை, தேசிய கட்சியான பாஜகவை சேர்ந்தவர்.
இதுகுறித்து சுதீப்பிடம் கேட்டபோது, "இக்கட்டான காலங்களில் பாஜக எனக்கு ஆதரவளித்தது. நான் இப்போது அவர்களுக்கு ஆதரவளிக்க போகிறேன். நான் பாஜகவுக்காக பிரச்சாரம் மட்டுமே செய்வேன், தேர்தலில் போட்டியிட மாட்டேன்" என்று கூறினார்.
மேலும், அவர், எந்தக் கட்சியில் முதல்வர் பசவராஜ் பொம்மை இருந்தாலும், அவருக்கு ஆதரவளிபேன் என்றும் கூறி இருந்தார்.
இவரை தொடர்ந்து, மாற்றொரு கன்னட சூப்பர்ஸ்டாரான யாஷ்-உம் ஒரு தேசிய கட்சிக்கு பிரச்சாரம் செய்ய இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நடிகர்கள்
சென்ற தேர்தலிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்ட யாஷ்
KGF படங்களின் மூலம், இந்தியா முழுவதும் தற்போது பிரபலமாகி இருக்கும் நடிகர் யாஷ், சென்ற சட்டமன்ற தேர்தலின் போதும், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ஆனால் எந்த கட்சியையும் சாராமல், இரண்டு வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்தார். அவர்கள் இருவருமே வேறு வேறு காட்சிகளை சேர்ந்தவர்கள்.
ஒருவர் மைசூரு மாவட்டத்தில் போட்டியிட்டார். மற்றவர் மாண்டியாவில் போட்டியிட்டார்.
தற்போது, சுதீப் பசவராஜ் பொம்மைக்கு ஆதரவாக இறங்கியுள்ள நிலையில், பல்வேறு கட்சிகள், யாஷிடம் கோரிக்கை வைத்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
இருப்பினும், பிரதான தேசிய கட்சி ஒன்று, அவரிடம் பேசி சம்மதிக்க வைத்துள்ளதாகவும், அந்த கட்சியின் நட்சத்திர பேச்சாளராக யாஷ்ஷை விரைவில் அறிவிப்பார்கள் என்றும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.