Page Loader
கே.ஜி.எஃப் 2 ஓராண்டு நிறைவு - மூன்றாம் பாகத்திற்கான ஹிண்ட் வீடியோ வெளியீடு! 
கேஜிஎஃப் 2 பாகம் 1 ஆண்டு நிறைவு - புதிய வீடியோவை வெளியிட்ட படக்குழு

கே.ஜி.எஃப் 2 ஓராண்டு நிறைவு - மூன்றாம் பாகத்திற்கான ஹிண்ட் வீடியோ வெளியீடு! 

எழுதியவர் Siranjeevi
Apr 14, 2023
05:50 pm

செய்தி முன்னோட்டம்

கன்னடத்தில் எடுக்கப்பட்ட கே ஜி எஃப் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி செம்ம ஹிட் அடித்தது. இந்தியா முழுவதும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படம், தமிழ் சினிமா ரசிகர்ளிடையே சக்கைபோடு போட்டது. பின் இதன் இரண்டாவது பாகத்தை வெளியிட்டார் இயக்குனர் பிரசாந்த் நீல். கே.ஜி.எஃப்-2 பாகமும் திரையரங்கில் வெளியாகி 1000 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்நிலையில், கே.ஜி.எஃப் 2 பாகம் வெளியாகி 1 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கே.ஜி.எஃப் 3 பாகத்துக்கான தகவலையும் சேர்த்துள்ளனர். முக்கியமாக 1978 முதல் 1981 வரை ராக்கி பாய் எங்கிருந்தார் என குறிப்பிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post