Page Loader
KGF நாயகன் யாஷ் பிறந்தநாள்: பேனர் வைக்கும் போது மின்சாரம் தாக்கி இறந்த ரசிகர்கள்
KGF நாயகன் யாஷ் பிறந்தநாள்: பேனர் வைக்கும் போது மின்சாரம் தாக்கி இறந்த ரசிகர்கள்

KGF நாயகன் யாஷ் பிறந்தநாள்: பேனர் வைக்கும் போது மின்சாரம் தாக்கி இறந்த ரசிகர்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 08, 2024
02:34 pm

செய்தி முன்னோட்டம்

கன்னட திரையுலகின் பிரபலமான ஹீரோ யாஷ். இவர் 15 ஆண்டுகளுக்கு மேல் படங்களில் நடித்து வந்தாலும், அவரை நாடு முழுவதும் பிரபலப்படுத்தியது என்னமோ, KGF திரைப்படம் தான். ஆரம்பத்தில் கன்னடத்தில் வெளியான இந்த திரைப்படத்தின் வெற்றி, அதை மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட வைத்தது. இரண்டு பாகங்களாக வெளியான KGF மூலம், நட்சத்திர அந்தஸ்தை பெற்றார் யாஷ். அதன் பின்னர் யாஷுக்கான ரசிகர் வட்டம் அதிகரித்தது. இந்த நிலையில், இன்று யாஷிற்கு 38-வது பிறந்தநாள். இதை கொண்டாடும் விதமாக, நேற்று இரவு கர்நாடக மாநிலதில் உள்ள கடக் மாவட்டத்தில் யாஷின் ரசிகர்கள் சிலர், அவருக்கு பிரம்மாண்ட கட்-அவுட் வைக்க சென்றுள்ளனர். அந்த பேனர், உயரழுத்த மின்சாரக்கம்பி மேல் உராய்ந்து, மின்சாரம் பாய்ந்துள்ளது.

card 2

மின்சாரம் தாக்கி உயிரிழந்த ரசிகர்கள் 

பேனர், மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து, பேனர்-ஐ பிடித்திருந்த ரசிகர்கள் தூக்கி வீசப்பட்டன. அதில் மூன்று ரசிகர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இறந்தவர்களின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அவர்கள் ஹனமந்த ஹரிஜன் (21), முரளி நடவின்மணி (20), நவீன் காசி (19) ஆகியோர். இந்த சோகமான நிகழ்வு, கர்நாடகாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல, ஆந்திர மாநிலத்தில், கடந்த ஜூலை மாதம் நடிகர் சூர்யாவின் ரசிகர் ஒருவர், அவரின் பிறந்தநாளிற்கு கட்-அவுட் வைக்கும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது நினைவிருக்கலாம்.