கீர்த்தி சுரேஷ் தனது கணவர் ஆண்டனி தட்டில்-ஐ 12ஆம் வகுப்பில் சந்தித்தாராம்! கொரோனா காலம் முதல் லிவிங் டுகெதர்!
செய்தி முன்னோட்டம்
நடிகை கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது கணவர் ஆண்டனி தட்டில் என்பவரை எங்கே சந்தித்தார் என்பதையும், எத்தனை ஆண்டுகளாக காதலித்து வருகிறார் என பல விவரங்களை தெரிவித்துள்ளார்.
கீர்த்தி, ஆண்டனியை, தான் 12-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது தான் முதலில் சந்தித்ததாகவும், அப்போது தான் பேசியதாகவும் கூறினார்.
கலாட்டா இந்தியாவிடம் பேசிய கீர்த்தி, ஒரு புத்தாண்டில் ஆண்டனி தனக்கு ப்ரொபோஸ் செய்ததால், இந்தாண்டுடன் அவர்கள் 15 ஆண்டுகள் காதல் உறவில் இருப்பதை பெருமிததுடன் தெரிவித்துள்ளார்.
கீர்த்தி, ஆண்டனி தன்னை விட ஏழு வயது மூத்தவர் என்றும், அவர்கள் ஆறு ஆண்டுகளாக லாங்-டிஸ்டன்ஸ் உறவில் இருந்ததாகவும் கூறினார்.
இந்த ஜோடி டிசம்பர் 2024 இல் கோவாவில் திருமணம் செய்து கொண்டது.
லவ் ஸ்டோரி
இவர்களின் அழகிய லவ் ஸ்டோரி குறித்து முதல்முறையாக மனம் திறந்த கீர்த்தி
இவர்களது காதல் கதை பற்றி கீர்த்தி சுரேஷ் கூறுகையில், இருவரும் ஆர்குட் மூலம் சந்தித்ததாக தெரிவித்தார்.
"நாங்கள் ஒரு உணவகத்தில் சந்திப்பதற்கு முன்பு ஒரு மாதம் நன்றாக அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். உணவகத்தில் நான் என் குடும்பத்துடன் இருந்தேன். என்னால் அவரை தனியாக சந்திக்க முடியவில்லை,. அதனால் நான் அவரைப் பார்த்து கண்ணடித்துவிட்டு, பின்னர் கிளம்பினேன்".
"பின்னர் அவரிடம், 'உங்களுக்கு தைரியம் இருந்தால், என்னை ப்ரொபோஸ் செய்யுங்கள்' என்றேன். அவர் முதலில் 2010 இல் எனக்கு ப்ரொபோஸ் செய்தார். 2016இல் அவர் எனக்கு ஒரு வாக்குறுதி மோதிரத்தை அளித்தார். நாங்கள் திருமணம் செய்து கொள்ளும் வரை அதை நான் கழற்றவில்லை. எனது எல்லா படங்களிலும் அதை நீங்கள் பார்க்கலாம்" எனவும் கூறினார்.
லிவிங் டுகெதர்
கொரோனா காலம் முதல் லிவிங் டுகெதர்
"நான் 12வது படிக்கும் போது நாங்கள் டேட்டிங் செய்ய ஆரம்பித்தோம், அவர் என்னைவிட ஏழு வயது மூத்தவர்" என்றும் கூறினார்.
கோவிட் போது அவர்கள் லிவிங் டுகெதராக தொடங்கியதாக கூறினார்.
"நாங்கள் தொற்றுநோய் காலத்தின் போது மட்டுமே ஒன்றாக வாழத் தொடங்கினோம். அவர் எனது வாழ்க்கைக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். இந்த மனிதன் என்னைப் பெற்ற அதிர்ஷ்டசாலி என்று யாராவது நினைத்தால், என்னை நம்புங்கள், அவரைப் பெற்றதற்கு நான் தான் அதிர்ஷ்டசாலி," என்று அவர் பகிர்ந்து கொண்டார்.
கீர்த்தி சுரேஷ் தங்கள் உறவை ரகசியமாக வைத்திருந்ததாகவும் கூறினார்.
எனினும் சக நடிகர்கள் சமந்தா, விஜய், அட்லி, கல்யாணி பிரியதர்ஷன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்ட சிலருக்கு மட்டுமே தெரியும் எனவும் கூறினார்.