Page Loader
'துபாய் காதலனை' குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் 
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகைகளில் ஒருவரான நடிகை கீர்த்தி சுரேஷின் அதிரடி ட்விட்.

'துபாய் காதலனை' குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் 

எழுதியவர் Arul Jothe
May 23, 2023
03:47 pm

செய்தி முன்னோட்டம்

கோலிவுட்டின் முன்னணி நடிகைகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது மாரி செல்வராஜ் இயக்கியுள்ள 'மாமன்னன்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 'ரிவால்வர் ரீட்டா' மற்றும் 'சைரன்' ஆகிய படங்களிலும் கீர்த்தி நடித்து வருகிறார். இது அவரது ரசிகர்களிடையே இந்த படங்கள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்த கிசுகிசுக்கள் அவ்வபோது இருந்து வந்தது. இதற்கிடையே தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்யவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி வந்தது. துபாயில் பிரபல தொழிலதிபராகவும் நீண்ட கால நண்பராகவும் இருக்கும் ஃபர்ஹாத் பின் லியாகத் என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து நடிகை கீர்த்தி சுரேஷ் காதலித்து வந்ததாக கூறப்பட்டது.

keerthi suresh

கீர்த்தி சுரேஷ் வாழ்க்கையின் மர்ம நபர்

இருவரும் சில காலம் ஒன்றாக இருந்ததாகவும் விரைவில் அவரை திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியது. ஃபர்ஹானும், கீர்த்தியும் ஒன்றாகக் காணப்படும் முதல் புகைப்படம் இதுவல்ல. இருவரின் படமும் இதற்கு முன்பும் வைரலாகியது. திருமணம், காதல் என பல சர்ச்சைகளில் பேசபட்டு வந்த கீர்த்தி சுரேஷ் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று ட்வீட் ஒன்றை பதிவிட்டார். அந்த பதிவில், "என் வாழ்க்கையில் இருக்கும் மர்ம நபர் ஒருவர் இருப்பின், நானே தெரியப்படுத்துவேன். இதற்காக என் நண்பரை இந்த சர்ச்சைகளில் இழுக்காதீர்கள்... இந்த முறையும் நீங்கள் தவறாகவே யூகித்துளீர்கள்" என கூறினார்.