Page Loader
நடிகை கீர்த்தி சுரேஷின் காதலர் இவரா? வைரலாகும் புகைப்படம் 
நடிகை கீர்த்தி சுரேஷின் காதலர் என ஒரு புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் இருவரும் ஒரே நிற உடை அணிந்திருந்தது தான், கிசுகிசு கிளம்பியதற்கு ஆரம்பம்

நடிகை கீர்த்தி சுரேஷின் காதலர் இவரா? வைரலாகும் புகைப்படம் 

எழுதியவர் Venkatalakshmi V
May 16, 2023
02:13 pm

செய்தி முன்னோட்டம்

கோலிவுட் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு விரைவில் திருமணம் எனவும், அவரின் பள்ளி தோழன் ஒருவரை காதலிக்கிறார் எனவும் வதந்திகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில், அவரின் காதலர் ஒரு ஹோட்டல் பிசினஸ் நடத்துவதாகவும், அவரை நடிகர் விஜய்க்கு மட்டும் அறிமுகம் செய்து வைத்ததாகவும் செய்திகள் வெளியாயின. இதனை கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா மறுத்தார். தனது மகள் கீர்த்தி யாரையும் காதலிக்கவில்லை எனவும், அப்படி ஏதாவது இருந்தால், அதை மறைத்து வைக்க வேண்டிய அவசியமும் அவருக்கு இல்லை எனவும் கூறினார். இந்நிலையில், கீர்த்தியின் காதலர் என ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஃபர்ஹான் பின் லியாகத் என பெயர் கொண்ட அவர், துபாயில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

card 2

தொடரும் வதந்திகள் 

நடிகை கீர்த்தி சுரேஷிற்கும், வதந்திக்கு ஏக பொருத்தம். அவர் முதல் முதலில், காமெடி நடிகர் சதீஷுடன் திருமணம் என்று தான் வதந்தி துவங்கியது. அதன் பின்னர், சதீஷிற்கு திருமணம் ஆனதற்கு பிறகு அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதன் பின்னர், நடிகர் விஜய்யுடன் காதல் எனவும் கூறப்பட்டது. விஜய் உடன் தொடர்ச்சியாக இரண்டு படங்கள் செய்ததால் இந்த பேச்சு துவங்கி இருக்கலாம் என சமாதானம் கூறப்பட்டாலும், கீர்த்தி தெலுங்கு படவுலகில் கவனம் செலுத்த துவங்கியதும், இந்த வதந்தி சற்று ஓய்ந்தது. தற்போது, கீர்த்தியின் பள்ளி தோழன் என ஒருவரை இணைத்து கிசுகிசுக்க படுகிறது. ஆனால் அந்த புகைப்படத்தில் இருக்கும் நபர், கீர்த்தியுடன் படைத்தவரா என தெரியவில்லை.