Page Loader
பிரபாஸின் 'கல்கி 2898 A.D' படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்; ஆனால்...!
புஜ்ஜி கதாபாத்திரத்திற்கு வாய்ஸ் கொடுத்திருப்பது கீர்த்தி சுரேஷ்!

பிரபாஸின் 'கல்கி 2898 A.D' படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்; ஆனால்...!

எழுதியவர் Venkatalakshmi V
May 20, 2024
05:58 pm

செய்தி முன்னோட்டம்

இந்த வருடத்தின் பிரமாண்ட படைப்புகளில் ஒன்றான 'கல்கி 2898 A.D' திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷும் இணைந்துள்ளார். ஆனால், அவர் திரையில் தோன்றமாட்டார். சமீபத்தில் வெளியான 'கல்கி 2898 A.D' அப்டேட்டில் 'புஜ்ஜி' என்ற ரோபோ கதாபாத்திரத்தை அறிமுகம் செய்தனர். இந்த அப்டேட் வீடியோவை கவனித்தவர்கள், அதன் குரல் பரிச்சயமான குரலாக இருப்பதை பற்றி யோசித்திருப்பீர்கள். ஆம், புஜ்ஜி கதாபாத்திரத்திற்கு வாய்ஸ் கொடுத்திருப்பது கீர்த்தி சுரேஷ்! 'மகாநதி' திரைப்படம் மூலமாக தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ், அப்படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்த 'கல்கி 2898 A.D' திரைப்படத்திலும் சென்டிமெண்டாக இணைந்துள்ளார். இந்த படத்தில் 'பைரவா' என்கிற பாத்திரத்தில் நடிக்கிறார் பிரபாஸ். வில்லன் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார்.

embed

'புஜ்ஜி'கீர்த்தி சுரேஷ்!

Meet me & my friend Bhairava on May 22nd!https://t.co/7E886z6HTe#Kalki2898AD pic.twitter.com/y1iab5lZ3F— Bujji (@BelikeBujji) May 18, 2024