Page Loader
தனுஷிற்கு பதிலாக கவினா? இணையத்தில் வைரலாகும் புது தகவல்
இயக்குனர் எலன், கவின் உடன் இணையப்போகும் படத்திற்கான கதை தனுஷிற்காக எழுதிய கதையாக இருக்கும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன

தனுஷிற்கு பதிலாக கவினா? இணையத்தில் வைரலாகும் புது தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
May 02, 2023
02:29 pm

செய்தி முன்னோட்டம்

'பியார் பிரேமா காதல்' படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் இயக்குனர் எலன். அந்த படத்தின் மூலமாகவே கோலிவுட்டின் தவிர்க்கமுடியாத இளம் நடிகராக பிரபலமானார் ஹரிஷ் கல்யாண். அவருடன் மீண்டும் 'ஸ்டார்' என்ற படம் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பல காரணங்களால் அந்த படம் தள்ளிப்போடபட்டது. இந்நிலையில், தனுஷுடன் இணையப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், தனுஷ் தொடர்ந்து பிஸியாக இருப்பதால், இவர்கள் கூட்டணியில் படம் உருவாவதும் தள்ளிப்போனது. மறுபுறம், சின்னத்திரை மூலம் பிரபலமடைந்த கவின், சமீபத்தில் வெளியான 'டாடா' திரைப்படத்தை தொடர்ந்து, டான்ஸ் மாஸ்டர் சதிஷ் இயக்குனராக அறிமுகமாகும் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த படமும் தள்ளிபோகவே, தற்போது கவினும், எலனும் இணையப்போகிறார்கள் என செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

கவினின் அடுத்த படம் எலனுடனா?