இரண்டே வாரத்தில் ஓடிடிக்கு வந்த வா வாத்தியார்! கார்த்தி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அமேசான் பிரைம்
செய்தி முன்னோட்டம்
பல நிதி சிக்கல்கள் மற்றும் வெளியீடு தாமதங்களுக்கு பிறகு, கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'வா வாத்தியார்'. 'சூது கவ்வும்' புகழ் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்த இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது. பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 4 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியாகும். ஆனால், 'வா வாத்தியார்' திரைப்படம் வெளியான இரண்டே வாரங்களில், அதாவது இன்று, ஜனவரி 28, அமேசான் பிரைம் வீடியோ (Prime Video) தளத்தில் வெளியாகியுள்ளது.
விபரங்கள்
படம் குறித்த விபரங்கள்
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் இந்த படம் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான தாத்தா (ராஜ்கிரண்), தனது பேரனை (கார்த்தி) அவரது மறுபிறவியாகவே வளர்க்கிறார். நேர்மையற்ற போலீஸ் அதிகாரியாக மாறும் பேரன், தனது தாத்தாவின் கொள்கைகளுக்கும் தனது வாழ்க்கை முறைக்கும் இடையே சிக்கி தவிப்பதே இப்படத்தின் நகைச்சுவை கலந்த ஆக்ஷன் கதையாகும். கார்த்திக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்தராஜ் மற்றும் கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
are you ready for the lessons? 👀#VaaVaathiyaarOnPrime, New Movie, Watch Now https://t.co/4rSzNHf00y@Karthi_Offl @IamKrithiShetty #NalanKumarasamy @Music_Santhosh@VaaVaathiyaar @StudioGreen2 @gnanavelraja007 #Rajkiran #Sathyaraj #Anandaraj @GMSundar_ #Karunakaran… pic.twitter.com/Sbu8l8WWrg
— prime video IN (@PrimeVideoIN) January 27, 2026