LOADING...
தமிழ்நாட்டில் பாக்ஸ் ஆபிஸில் 'காந்தாரா' ஆதிக்கம்: தனுஷின் 'இட்லி கடை' பின்தங்கியது!
வசூலில் 'காந்தாரா: அத்தியாயம் 1' திரைப்படமே முன்னிலை வகிக்கிறது

தமிழ்நாட்டில் பாக்ஸ் ஆபிஸில் 'காந்தாரா' ஆதிக்கம்: தனுஷின் 'இட்லி கடை' பின்தங்கியது!

எழுதியவர் Venkatalakshmi V
Oct 06, 2025
03:22 pm

செய்தி முன்னோட்டம்

தனுஷ் எழுதி இயக்கி, நடித்துள்ள புதிய திரைப்படமான 'இட்லி கடை', விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், திரையரங்க வசூலில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணமாக, ரிஷப் ஷெட்டியின் பான்-இந்தியா திரைப்படமான 'காந்தாரா: அத்தியாயம் 1' (Kantara: Chapter 1) தமிழகத்தில் பெற்றிருக்கும் அமோக வரவேற்பு பார்க்கப்படுகிறது. 'இட்லி கடை' திரைப்படம் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியிடப்பட்டாலும், வசூலில் 'காந்தாரா: அத்தியாயம் 1' திரைப்படமே முன்னிலை வகிக்கிறது. பாக்ஸ் ஆபிஸ் வசூலில், நேற்று வரை, இட்லி கடை ₹4.27 கோடி வசூலித்துள்ளது. அதே நேரம், காந்தாரா: அத்தியாயம் 1 ₹5.77 கோடி வரை வசூலித்துள்ளது. சனிக்கிழமை வசூலை விட 'இட்லி கடை' திரைப்படம் ஞாயிற்றுக்கிழமை குறைவாகவே வசூலித்துள்ளது.

சாதனை

'காந்தாரா: அத்தியாயம் 1' உலகளாவிய சாதனை 

'காந்தாரா: அத்தியாயம் 1' திரைப்படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனையை படைத்து வருகிறது. திரைப்படம் வெளியாகி நான்கு நாட்களில் இந்த படத்தின் உலகளாவிய வசூல் ₹325 கோடியை எட்டியுள்ளது. இதன் மூலம், இந்த ஆண்டு உலகளவில் ₹300 கோடி வசூலைத் தாண்டிய முதல் கன்னடத் திரைப்படம் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. உள்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் ₹61 கோடி நிகர வசூலை ஈட்டிய இப்படம், நீட்டிக்கப்பட்ட முதல் வார இறுதியில் ₹223.25 கோடி நிகர (மொத்தம் ₹268 கோடி) உள்நாட்டு வசூலுடன் முடிவடைந்துள்ளது. இது 2022-ல் வெளியான KGF 2-க்கு அடுத்தபடியாக, வரலாற்றில் எந்தவொரு கன்னட படத்திற்கும் கிடைக்காத வரவேற்பு இந்த படத்திற்கு கிடைத்துள்ளது.

திரையரங்குகள்

திரையரங்குகள் அதிகரிப்பு

'இட்லி கடை' திரைப்படத்தை விட 'காந்தாரா: அத்தியாயம் 1'-க்கு உள்ள மவுசு காரணமாக, அதன் திரையரங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. திங்கட்கிழமைக்கான முன்பதிவிலும் இரண்டு படங்களுக்கும் டிக்கெட்டுகள் சம அளவில் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதே நிலை தொடர்ந்தால், தமிழகத்தில் 'இட்லி கடை' படத்தை, 'காந்தாரா: அத்தியாயம் 1' முழுவதுமாக 'வாஷ் அவுட்' செய்ய வாய்ப்புள்ளதாக வர்த்தக வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 'காந்தாரா: அத்தியாயம் 1' திரைப்படம், 2022-ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'காந்தாரா'வின் முன்னோட்ட படமாகும். ரிஷப் ஷெட்டியால் எழுதி, இயக்கப்பட்டு அவரே நடித்துள்ளார்.