
தக் லைஃப் படத்தில் தலைகீழாக வசனம் பேசி அசத்திய கமல்ஹாசன்
செய்தி முன்னோட்டம்
உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளையொட்டி அவர் நடிக்கும் படங்கள் குறித்த அப்டேட்டுகள் கடந்த வாரம் முதல் வெளிவர தொடங்கின.
நேற்று முன்தினம், கமலஹாசன் மணிரத்தினத்துடன் 37 ஆண்டுகளுக்கு பின் இணையும், #KH234 திரைப்படத்தின் பெயர் மற்றும் டைட்டில் வீடியோ வெளியிடப்பட்டது.
KH234 திரைப்படத்திற்கு தக் லைஃப் என பெயரிடப்பட்ட நிலையில், கமலஹாசன் இடம்பெற்ற சண்டை காட்சிகளும் டைட்டில் வீடியோவில் வெளியானது.
அதில் இடம் பெற்றுள்ள இறுதி வசனத்தை, கமலஹாசன் தலைகீழாக பேசி நடித்துள்ளார். வசனத்தை அவர் தலைகீழாக பேச, படக்குழுவினர் அதை 'ரிவர்ஸ் மோஷன் ஷாட்' முறையில் படமாக்குகின்றனர்.
இது தொடர்பான காட்சிகள் வெளியாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
தலைகீழாக வசனம் பேசிய கமல்
'Thug Life' Reverse Motion Shot Making! 🤯#ThugLife | #KamalHaasan | #ManiRatnam | #ReverseMotion pic.twitter.com/GrP7Bp9uwF
— சினிமா விகடன் (@CinemaVikatan) November 7, 2023