Page Loader
'Thug life': KH234 திரைப்படத்தின் தலைப்பு வெளியானது 
KH234 திரைப்படத்தில் கமலஹாசன், 'ரங்கராய சக்திவேல் நாயக்கர்' கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

'Thug life': KH234 திரைப்படத்தின் தலைப்பு வெளியானது 

எழுதியவர் Srinath r
Nov 06, 2023
05:14 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் மணிரத்தினத்துடன் 37 ஆண்டுகளுக்குப் பின் கமலஹாசன் இணையும், KH234 திரைப்படத்திற்கு தக் லைஃப் என பெயரிடப்பட்டுள்ளது. நாளை கமலஹாசனின் 69 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இன்றே படக்குழு அவர் நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் டைட்டில் அறிவிப்புக்கென மணிரத்தினம் பிரத்தியேகமாக தயாரித்த வீடியோவையும் வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அப்டேட்டையும் படக்குழு வெளியிட்டு வந்தது. அந்த வகையில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில், படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், ரஜினி மூவிஸ் உடன் இணைந்து ஆர் மகேந்திரன் மற்றும் சிவ ஆனந்த் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

கேங்ஸ்டர் படமாக உருவாகும் KH234க்கு 'தக் லைஃப்' என பெயரிடப்பட்டுள்ளது