LOADING...
தக் லைஃப் 4வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவு
Thug Life தொடக்க வார இறுதியில் ரூ.36.52 கோடி நிகர வசூலை ஈட்டியது

தக் லைஃப் 4வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவு

எழுதியவர் Venkatalakshmi V
Jun 09, 2025
12:12 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'தக் லைஃப்' திரைப்படம், அதன் முதல் வார இறுதியில் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடி நிகரத்தை ஈட்டத் தவறிவிட்டது. சாக்னில்க் படி, இந்த படம் அதன் தொடக்க வார இறுதியில் ரூ.36.52 கோடி நிகர வசூலை ஈட்டியது. ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 4), இந்த திரைப்படம் இந்தியாவில் ரூ.6.12 கோடியை வசூலித்தது. இதில் பெரும்பாலான பங்களிப்பு தமிழ் பதிப்பிலிருந்து வந்தது தான். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எண்ணிக்கையில் ஏற்ற இறக்கத்தை தயாரிப்பாளர்கள் எதிர்பார்த்திருந்தாலும், படம் முறையே ரூ.7.75 கோடி மற்றும் ரூ.6.12 கோடியை வசூலித்தது.

தினசரி வசூல்

Thug life படத்தின் தினசரி வசூல்

இந்தியாவில் தக் லைஃப் திரைப்படத்தின் 4 நாள் வாரியான வசூல் நிலவரத்தை பாருங்கள்: நாள் 1: ரூ.15.5 கோடி நாள் 2: ரூ.7.15 கோடி நாள் 3: ரூ.7.75 கோடி நாள் 4: ரூ.6.12 கோடி கமல்ஹாசனின் படங்களின் பாக்ஸ் ஆபிஸின் வசூலில், கடந்த ஐந்து ஆண்டுகளில் 'தக் லைஃப்' தான் மிகக் குறைந்த வசூல் என்று இந்தியா டுடேவின் செய்தி தெரிவிக்கிறது. பார்வையாளர்களால் கடுமையாகப் விமர்சிக்கப்பட்ட 'இந்தியன் 2' கூட அதன் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் தொடக்க வார இறுதியில் ரூ.69.15 கோடி நிகரத்தை ஈட்டியது. கமல்ஹாசனின் முந்தைய வெளியீடான 'விக்ரம்' தான் அவருடைய கடைசி பிளாக்பஸ்டர் ஹிட் படமாகும். இது தொடக்க வார இறுதியில் ரூ.110.8 கோடி வசூலித்தது.