Page Loader
இத்தாலி நகரின் பிரபல தியேட்டரை விசிட் அடித்த கமல்
தனது 'ஹவுஸ் ஆப் காதர்' நிறுவனத்திற்காக இத்தாலி சென்றுள்ள கமல்

இத்தாலி நகரின் பிரபல தியேட்டரை விசிட் அடித்த கமல்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 21, 2023
07:13 pm

செய்தி முன்னோட்டம்

தனது 'ஹவுஸ் ஆப் கதர்' என்ற நிறுவனத்தின் மூலம், கதர் ஆடைகளை பிரபலப்படுத்தும் முயற்சியை கமல்ஹாசன் முன்னெடுத்துளார் என்பது பலருக்கும் தெரிந்து இருக்கும். இந்த ப்ராண்டில், கதர் ஆடைகளை, நாகரீக ரசனைக்கு ஏற்றபடி, டிசைன் செய்து, தயார் செய்கிறார்கள். K.H என்று சுருக்கமாக அழைக்கப்படும் அந்த நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல, உலக அரங்கில் நடக்கும் பேஷன் ஷோக்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. அப்படி ஒரு பேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, அந்த நிறுவனத்தின் சார்பாக கமல், தற்போது இத்தாலியில் உள்ளார். இத்தாலி நகர தெருக்களில் நின்று, நேற்று படங்களை பதிவிட்ட கமல் ஹாசன், இன்று, மிலன் நகரின் பிரபல 'Teatro alla Scala ' எனப்படும் தியேட்டரை விசிட் அடித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

இத்தாலியில் கமல்