NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி /  'கல்கி 2898 கி.பி' படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கடும் சரிவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
     'கல்கி 2898 கி.பி' படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கடும் சரிவு 

     'கல்கி 2898 கி.பி' படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கடும் சரிவு 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 29, 2024
    03:47 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் நடித்த டிஸ்டோபியன் அறிவியல் புனைகதை திரைப்படமான 'கல்கி 2898 கி.பி' வெளியான இரண்டாவது நாளில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் கண்டது.

    முதல் நாளன்று வரலாற்றில் மிக பெரிய அளவில் வசூலை கண்ட மூன்றாவது பெரிய ஓப்பனர் என்ற பெயரை எடுத்த இப்படத்தின் வருவாய் 2 ஆம் நாளில் கிட்டத்தட்ட 43% குறைந்துள்ளது.

    நாக் அஸ்வின் இயக்கிய இப்படம் இந்தியாவில் நேற்று ரூ.54 கோடியை வசூலித்ததாக Sacnilk தரவுகள் கூறுகின்றன.

    இந்நிலையில், இப்படம் வெளியாகி இரண்டாவது நாள் வசூலில் 43.3% வீழ்ச்சியை கண்டுள்ளது.

    திரையுலகம் 

    'கல்கி 2898 கிபி'யின் மொத்த உள்நாட்டு வசூல் 

    சிறிய சரிவு இருந்தபோதிலும், கல்கி 2898 AD இன் மொத்த உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல் 2ஆம் நாள் முடிவில் ரூ.149 கோடியை எட்டியது.

    இப்படம் தெலுங்கில் ரூ.25.64 கோடியையும், தமிழில் ரூ.3.5 கோடியையும், இந்தியில் ரூ.22.5 கோடியையும், கன்னடத்தில் ரூ.0.35 கோடியையும், மலையாளத்தில் ரூ.2 கோடியையும் வசூலித்துள்ளது.

    நேற்று ஒட்டுமொத்தமாக 65.02% ஆக்கிரமிப்பு விகிதத்துடன் தெலுங்கு சினிமா தியேட்டர்களில் இப்படம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது.

    ஹிந்து தொன்மவியல் மற்றும் அறிவியல் புனைகதைகளின் தனித்துவமான கலவையான இப்படத்தின் கதைக்களம் எதிர்காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இப்படம், தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் வெளியிடப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரபாஸ்
    தெலுங்கு திரையுலகம்

    சமீபத்திய

    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்

    பிரபாஸ்

    நடிகர் பிரபாஸ் திருமணம் குறித்து அவரே வெளியிட்ட புதுத்தகவல்;  கொண்டாட்டத்தில் ரசிகர்கள்  நடிகர்
    டெல்லியில், ரூ.2,200 க்கு விற்கப்பட்ட ஆதிபுருஷ் திரைப்படத்தின் டிக்கெட்டுகள் திரையரங்குகள்
    ஆதிபுருஷ் படத்தை காண வந்த ஹனுமார்! ட்விட்டரில் வைரலாகும் வீடியோ ட்ரெண்டிங் வீடியோ
    ஆதிபுருஷ் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு கடிதம்  பிரதமர் மோடி

    தெலுங்கு திரையுலகம்

    இசையமைப்பாளர் அனிருத் காட்டில் மழை; ஷாருக்கானை தொடர்ந்து, ஒரு மெகாஸ்டார் படத்தில் இணைகிறார் அனிருத்
    தெலுங்கு திரையுலகில், முதல் 'சிறந்த நடிகர்'-க்கான தேசிய விருதை வென்றுள்ளார் அல்லு அர்ஜுன் தேசிய விருது
    புஷ்பா 2: அல்லு அர்ஜுன் வாழ்க்கையில் ஒரு நாள் தேசிய விருது
    இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிறாரா நாகசைதன்யா? தெலுங்கு படங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025