
'கல்கி 2898 கி.பி': இந்தியாவில் மட்டுமே 1 மில்லியனுக்கும் அதிகமான முன்பதிவுகள்
செய்தி முன்னோட்டம்
பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் என பெரிய நட்சித்திர பட்டாளம் நடித்துள்ள மெகா பட்ஜெட் சயின்ஸ்-ஃபிக்ஷன் திரைப்படமான 'கல்கி 2898 AD' நாளை வளியாகிறது.
அதற்கு முன்பே ப்ரீபுக்கிங்கில் 1 மில்லியனுக்கும் அதிகமான டிக்கெட்டுகளை விற்றுள்ளது இந்த திரைப்படம்.
இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியின்படி, நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்த திரைப்படம், ப்ரீபுக்கிங் விற்பனையில் இருந்து மட்டுமே 50 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளது.
சுவாரஸ்யமாக, 'கல்கி 2898 கி.பி' ஏற்கனவே ஹைதராபாத்தில் ப்ரீபுக்கிங்கில் சாதனை செய்துள்ளது.
ப்ரீபுக்கிங்கில் ரூ.14 கோடி வசூல் செய்த முதல் படமாக உள்ளது. இது பிரபாஸின் முந்தைய ரிலீசான 'சலார்' படத்தை விட ரூ.2 கோடி அதிகம்.
ட்விட்டர் அஞ்சல்
அமெரிக்காவில் சரித்திரம் படைக்கும் முன்பதிவுகள்
𝐓𝐡𝐞 𝐁𝐨𝐱 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞 𝐡𝐚𝐬 𝐧𝐞𝐯𝐞𝐫 𝐬𝐞𝐞𝐧 𝐚𝐧𝐲𝐭𝐡𝐢𝐧𝐠 𝐥𝐢𝐤𝐞 𝐭𝐡𝐢𝐬! 🔥
— Prathyangira Cinemas (@PrathyangiraUS) June 26, 2024
$3 MILLION+ North America Premieres Pre Sales for #Kalki2898AD. #Prabhas @VyjayanthiFilms @Kalki2898AD pic.twitter.com/ukmGWprvSQ