அடுத்த செய்திக் கட்டுரை
மாடல் நடிகையுடனான காதலை உறுதி செய்த நடிகர் காளிதாஸ்
எழுதியவர்
Venkatalakshmi V
Feb 14, 2023
11:38 am
செய்தி முன்னோட்டம்
நடிகர் ஜெயராமின் மகனும், நடிகருமான காளிதாஸ் ஜெயராமன், தானும் காதல் வயப்பட்டிருப்பதை தற்போது உறுதி செய்துள்ளார்.
மீன்குழம்பும் மண்பானையும் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் காளிதாஸ். தொடர்ந்து, புத்தம் புது காலை, பாவக்கதைகள், விக்ரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது காதலில் இருப்பதாக, தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தாரிணி காலிங்கையராயர் என்ற மாடல் நடிகையுடன் தனது காதலை வெளிப்படையாக கூறியுள்ளார்.
அந்த பதிவில் இருந்த குறிப்பின் படி, "இறுதியாக இந்த காதலர் தினத்தில் நான் சிங்கிள் இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.
சென்னையை சேர்ந்த மாடல் அழகியான தாரிணி, மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா 2021 -இல் பங்கு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.