27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கஜோலுடன் இணையும் நடனப்புயல் பிரபுதேவா!
27 வருட இடைவெளிக்குப் பிறகு, நடனப்புயல் பிரபுதேவா, பாலிவுட் நடிகை கஜோலுடன் மீண்டும் இணையவுள்ளார். தயாரிப்பில் உள்ள ஒரு ஹை-பட்ஜெட் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கத் தயாராகி வருவதாக பிங்க்வில்லா தெரிவித்துள்ளது. இந்தப் படம் தெலுங்கு இயக்குனர் சரண் தேஜ் உப்பலபதியின் பாலிவுட் எண்ட்ரியாகும். இந்த திரைப்படத்தில் மூத்த நடிகர் நசிருதீன் ஷா, சம்யுக்தா மேனன், ஜிஷு சென்குப்தா மற்றும் ஆதித்யா சீல் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர் எனவும் அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது. 1997இல் ராஜிவ் மேனன் இயக்கத்தில் 'மின்சார கனவு' படத்தில் இணைந்து நடித்த இந்த ஹிட் ஜோடி தற்போது மீண்டும் இணையும் செய்தி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை தூண்டியுள்ளது.
கஜோலுடன் இணையும் நடனப்புயல்!
#kajol #prabhudeva #charantej #wawaoriginals pic.twitter.com/cDZWsjKRjz— WAWA Originals (@WAWAOriginals) May 24, 2024