69வது தேசிய விருதுகள்: சிறந்த பிராந்திய மொழி திரைப்பட விருதை வென்ற 'கடைசி விவசாயி'
செய்தி முன்னோட்டம்
ஆண்டுதோறும் வெளியாகவும் திரைப்படங்களில், சிறந்த திரைப்படங்கள் மற்றும் அவற்றை சார்ந்த பல பிரிவுகளில் மத்திய அரசு, தேசிய விருது வழங்குவது வழக்கம். இந்திய சினிமாவில், சிறந்த திரைப்படமாக ஒரு படமும், அது தவிர பிராந்திய மொழிகளில் சிறந்த படமாக ஒன்றும் தேர்வு செய்யப்படும்.
அந்த வகையில், 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தில், சிறந்த திரைப்படமாக, மாதவன் இயக்கிய 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படம், சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றது.
அதோடு, சிறந்த நடிகருக்கான விருதை, 'புஷ்பா' படத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜுன் வென்றார். சிறந்த நடிகைக்கான விருதை, 'கங்குபாய்' படத்தில் நடித்ததற்காக அலியா பட்டும்,'மிமி' படத்தில் நடித்ததற்காக 'க்ரிதி சானொன்'-ம் வென்றனர்.
விருதுகள்
பிராந்திய மொழி திரைப்பட விருதை வென்ற 'கடைசி விவசாயி'
சென்ற ஆண்டு தமிழில் வெளி வந்த 'பிக்க்ஷன்' பிரிவில், இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான 'கடைசி விவசாயி' திரைப்படம், சிறந்த பிராந்திய மொழிக்கான விருதை பெற்றுள்ளது.
மேலும் இந்த படத்தில் நடித்த நடிகர் நல்லாண்டிக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தில், முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்தை, நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம். இந்த படத்தில் 'மாயாண்டி' என்ற கதாபாத்திரத்தில், ஏத்தாதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி, உண்மையான விவசாயியை நம் கண்முன்னே காட்டிய நடிகர் நல்லாண்டி, உடல் நலக்குறைவால் படம் வெளியாகும் முன்னரே காலமானார்.