ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது
செய்தி முன்னோட்டம்
யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ஸ்பை த்ரில்லர் படமான வார் 2 படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டீசர் செவ்வாய்க்கிழமை காலை வெளியிடப்பட்டது.
அதன் நட்சத்திரங்களில் ஒருவரான ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், சடீஸர் வெளியிடப்பட்டது.
2019 ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் படமான 'வார்' படத்தின் தொடர்ச்சியாக , இந்தப் படம் YRF இன் ஸ்பை யுனிவர்ஸின் ஒரு பகுதியாகும்.
டீசரில் ஹிருத்திக் ரோஷனுக்கும் ஜூனியர் என்டிஆருக்கும் இடையிலான பிரமாண்டமான போரை பார்த்த பிறகு ரசிகர்கள் ஏற்கனவே உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர்.
விமர்சனம்
முந்தைய பிளாக்பஸ்டர்களை விட 'வார் 2' மிஞ்சும் என்று ரசிகர்கள் கணிப்பு
ஜூனியர் என்டிஆரும் ஹ்ரித்திக் ரோஷனும் ஆக்ரோஷமாக மோதிக்கொள்வதை டீஸர் காட்டுகிறது. இப்படம் ஆக்ஷன் காட்சிகளால் நிரம்பி இருக்கும் என்பதில் ஐயமில்லை.
வாள் சண்டைகள் மற்றும் துப்பாக்கிச் சண்டைகள் முதல் ரயில் உச்சியில் நடக்கும் கடுமையான சண்டைகள் வரை, இப்படத்தில் வாய்பிளக்க வைக்கும் காட்சிகள் நிறைந்துள்ளது.
இரு நடிகர்களின் நட்சத்திர பலத்தால், இந்தப் படம் YRF ஸ்பை யுனிவர்ஸ் படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக இருக்கும் என்று பல ரசிகர்கள் கணிக்கிறார்கள்.
வெளியீட்டு தேதி
'கூலி' உடன் மோதவிருக்கும் 'வார் 2'
'வார் 2' திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது.
அதே தேதியில் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த 'கூலி' திரைப்படமும் வெளியாகிறது.
இதனால் தமிழ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வார் 2 திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ஹ்ரித்திக் ரோஷனுடன், கியாரா அத்வானியும் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
அயன் முகர்ஜி இயக்கிய இந்தத் தொடர்ச்சி, ஹ்ரித்திக் ரோஷன், டைகர் ஷெராஃப் மற்றும் வாணி கபூர் ஆகியோர் நடித்த 2019 ஆம் ஆண்டு வெளியான வார் படத்தின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது.
'வார் 2' படம் இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.