'மிரட்டலால் கல்யாணம் நடக்கவில்லை!': மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கைக்கு வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட ஜாய் கிரிஸில்டா
செய்தி முன்னோட்டம்
நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக எழுந்த புகாரை மறுத்து ரங்கராஜ் அறிக்கை வெளியிட்ட நிலையில், ஜாய் கிரிஸில்டா அதற்குப் பதிலளிக்கும் விதமாக இன்ஸ்டா பதிவை வெளியிட்டு சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார். ரங்கராஜ் தன்னிடம் கொஞ்சி காதலுடன் பேசிய வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். இதனால் இந்த விவகாரம் மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மறுப்பு
ரங்கராஜின் மறுப்பு அறிக்கை
ரங்கராஜ் ஜாயை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதை மகளிர் ஆணையத்தில் ஒப்புக்கொண்டார் என்று முன்னதாகத் தகவல் வெளியானது. ஆனால், அதை ரங்கராஜ் தனது சமீபத்திய அறிக்கையில் திட்டவட்டமாக மறுத்தார். அதோடு,"மகளிர் ஆணையத்தில் நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை. ஜாய்யை நான் தன்னிச்சையாக திருமணம் செய்து கொள்ளவில்லை. என்னிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கத்துடன் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தி இந்தத் திருமணம் நடந்தது," என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மாதந்தோறும் ரூ.1.5 லட்சம் பராமரிப்புத் தொகையும், BMW காருக்கான EMI-யும் ஜாய் கிரிஸில்டா கோரியதை ஏற்க தான் மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், DNA பரிசோதனைக்கு தான் ஒருபோதும் மறுக்கவில்லை என்றும், அறிவியல் பூர்வமாக அந்தக் குழந்தை தன்னுடையது என்று நிரூபிக்கப்பட்டால் அதை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.
வீடியோ
ஜாய் கிரிஸில்டா வெளியிட்ட வீடியோ
ரங்கராஜ் தனது திருமணத்தை மறுத்து, அது மிரட்டலால் நடந்தது என்று கூறியதை அடுத்து, நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் ஜாய். அப்போது அவரது தனிப்பட்ட வாட்சப் சாட் மெஸேஜ்களை காட்டினார். தொடர்ந்து இன்று சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் ஜாய். அந்த வீடியோவில் மாதம்பட்டி ரங்கராஜ், "ஹே பொண்டாட்டி, நீ எவ்வளவு அழகு தெரியுமா? அவ்வளவு அழகு. லவ் யூ. சீக்கிரம் வந்துடு. மிஸ் பண்றேன். மிஸ் யூ. ரெடி ஆகிவிட்டேன்"என்று பாசத்துடன் பேசி, முத்தம் கொடுப்பதும் பதிவாகியுள்ளது. இதை வீடியோவிற்கு கேப்ஷனாக "வீடியோ என்ன மிரட்டலின் பெயரில் அனுப்பியதா? மக்களே, ப்ளீஸ் சொல்லுங்க - இதுல லவ்-ஆ பேசுறாரா இல்ல மிரட்டலின் பெயரில் பேசுறாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
இந்த வீடியோ என்ன மிரட்டலின் பெயரில் அனுப்பியதா??! Mr husband @MadhampattyRR ?
— Joy Crizildaa (@joy_stylist) November 6, 2025
மக்களே, ப்ளீஸ் சொல்லுங்க — இதுல லவ் லா பேசுறாரா இல்ல மிரட்டலின் பெயரில் பேசுறாரா?
கேக்குறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்ற மாதிரி 😂😂
This message was sent to me by my so-called… pic.twitter.com/AH8yekYNBs