வாலி திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்தது எதற்காக? உண்மையை கூறிய ஜோதிகா
நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் முதல்முதலில் அறிமுகமானது SJ சூர்யா இயக்கத்தில் வெளியான வாலி திரைப்படத்தில் தான். அந்த படத்தில் நடிகர் அஜித்துடன் ஒரு சிறிய வேடத்தில், ஒரே ஒரு பாட்டுக்கு நடித்திருந்தாலும், அவர் படம் முழுக்க பேசப்படுவார். படத்தில் முன்னணி கதாநாயகியாக நடித்திருந்தது சிம்ரன். இவர்கள் இருவரும் 90 களில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தனர். அதன் பின்னர், இருவரும் திருமணம் செய்து கொண்டு தத்தமது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த சூழலில், நடிகை ஜோதிகா தன்னுடைய கம்பேக் கேரியரில் குறிப்பிட்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் மலையாள நடிகர் மம்மூட்டியுடன் இனைந்து காதல் என்ற படத்தில் நடித்திருந்தார்.
வாலி படத்தில் சிறிய வேடத்தில் நடித்தது ஏன்?
அது தொடர்பாக, பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், அவர் 'வாலி' படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமாக ஒத்துக்கொண்டது எதற்காக என கேட்கப்பட்டது. அதற்கு ஜோதிகா, "ஆரம்பத்தில் எஸ் ஜே சூர்யா சிம்ரன் நடித்த ஹீரோயின் கதாபாத்திரத்தில் தான் தன்னை நடிக்க கமிட் செய்ததாகவும், பின்னர் ஹிந்தி படம் ஒன்றில் நடிக்க நான் கால்ஷீட் கொடுத்தேன். ஒரே நேரத்தில் இரண்டு படப்பிடிப்புகளின் கால்ஷீட் கிளாஷ் ஆனதால், வாலி படத்தில் இருந்து விலகினேன். அதன் பின்னரே சிம்ரன் இப்படத்தில் கமிட் ஆனார்" "பின்னர் எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் உள்ளது. அதில் நடிக்க முடியுமா என கேட்டபோது...என்னால் அந்த வாய்ப்பை மறுக்க முடியவில்லை. எனவே தான் அந்த கேமியோ ரோலில் நடித்தேன்" என கூறியுள்ளார்