Page Loader
ஜெயம் ரவி நடிப்பில் 'சைரன்' வெளியீட்டு தேதி அறிவிப்பு
ஜெயம் ரவி நடிப்பில் 'சைரன்' வெளியீட்டு தேதி அறிவிப்பு

ஜெயம் ரவி நடிப்பில் 'சைரன்' வெளியீட்டு தேதி அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jan 23, 2024
11:19 am

செய்தி முன்னோட்டம்

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'சைரன்'. இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்த திரைப்படம், வரும் பிப்ரவரி 16ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தை ஆண்டனி பாக்யராஜ் இயக்க, சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார் ஜெயம் ரவி. இப்படத்தில் மேலும், யோகி பாபு, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 'சைரன்' படத்திற்கு ஜிவி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜெயம் ரவி கடைசியாக, 'இறைவன்' படத்தில் நயன்தாராவுடன் நடித்திருந்தார். தொடர்ந்து, ஜெயம் ரவி அவரின் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் 'தனி ஒருவன் 2'-இல் நடித்து வருகிறார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post