Page Loader
ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடத்த சைரன் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு
இந்த திரைப்படத்தை, அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ளார்

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடத்த சைரன் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Apr 10, 2024
05:53 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'சைரன்' திரைப்படம், அடுத்த வாரம், ஏப்ரல் 19-ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான வேடத்தில் ஜெயம் ரவியும், காவல்துறை அதிகாரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும் நடித்துள்ள இந்த திரைப்படத்தை, அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ளார். கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம், 'சைரன்' கலவையான விமர்சனங்களை பெற்றது. 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்திற்கு பின்னர் பெரிதாக எந்தப்படமும் ஜெயம் ரவிக்கு கைகொடுக்கவில்லை. நயன்தாராவுடன் நடித்த 'இறைவன்' வந்த தடமே தெரியாமல் போனது. அதேபோல அகிலன் திரைப்படமும் வெற்றிபெறவில்லை. அதன்பின்னர் வெளியான 'சைரன்' சற்றே அவருக்கு ஆறுதலான வெற்றியை தந்தது எனலாம்.

embed

 'சைரன்' ஓடிடி ரிலீஸ்

Official - JayamRavi's #Siren to stream on Disney+Hotstar from Apr 19th 🚨 Good OTT window, of having 2 months gap after theatrical release 👌 pic.twitter.com/98ez1FzkhM— AmuthaBharathi (@CinemaWithAB) April 10, 2024