Page Loader
நயன்தாரா- ஜெயம் ரவி நடிக்கும் இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு 
இறைவன் ரிலீஸ் தேதி வெளியானது

நயன்தாரா- ஜெயம் ரவி நடிக்கும் இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு 

எழுதியவர் Venkatalakshmi V
Jun 07, 2023
06:54 pm

செய்தி முன்னோட்டம்

'பொன்னியின் செல்வன்- 2' படத்திற்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் 'இறைவன்'. நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்திற்கு ஏக எதிர்பார்ப்பு உள்ளது. அதற்கு காரணம், 'தனி ஒருவன்' படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் இணையும் திரைப்படம் இதுவே. நயன்தாரா திருமணத்திற்கு பிறகு கமிட் ஆன திரைப்படமும் இதுவே. இந்த படத்தை இயக்கி இருப்பது, 'என்றென்றும் புன்னகை' படத்தை இயக்கிய ஐ. அஹமது. படத்திற்கு இசையமைக்கவிருப்பது யுவன் ஷங்கர் ராஜா. சில வாரங்களுக்கு முன்னர் வெளியான படத்தின் போஸ்ட்டரை அடுத்து, தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி, இந்தியா முழுவதும் 4 மொழிகளில், 'இறைவன்' வெளியாகிறது.

ட்விட்டர் அஞ்சல்

இறைவன் ரிலீஸ் தேதி வெளியானது