பிரியங்கா சோப்ராவின் பல்கேரி $43 மில்லியன் மதிப்புள்ள நெக்லஸை பார்த்திருக்கிறீர்களா?
சமீபத்தில் இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற பிரபல ஃபேஷன் நிறுவனமான பல்கேரியின் 140வது ஆண்டு விழாவில் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் கலந்து கொண்டார். இத்தாலியின் தலைநகரில் உள்ள பாரம்பரிய தளமான Terme di Diocleziano இல் இந்த கொண்டாட்டம் நடைபெற்றது. பல்கேரியின் உயர் நகை சேகரிப்பான ஏடெர்னாவின் வெளியீட்டு விழாவில் Shu Qi, Anne Hathaway , மற்றும் Liu Yifei உள்ளிட்ட பிராண்ட் தூதர்கள் கலந்து கொண்டனர். இவர்களுடன் பிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் கலந்துகொண்டார். அப்போது அவர் பல்கேரியின் நேர்த்தியான 140 காரட் செர்பென்டி நெக்லஸ் அணிந்தபடி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். அந்த நெக்லசின் ஆச்சரியப்படவைக்கும் விவரங்கள் இதோ:
வாய்பிளக்கவைக்கும் அந்த காஸ்டிலி நெக்லசின் விவரங்கள்
சோப்ரா ஜோனாஸ் தனது புதிய பாப் சிகை அலங்காரம் மற்றும் டெல் கோர் நிறுவனத்தின் ஒரு ஆஃப் ஷோல்டர் கிரீம் மற்றும் கருப்பு கவுனுடன் இந்த நெக்லஸ் அணிந்து புகைப்படத்தை வெளியிட்டார். பல்கேரியின் மிகவும் விலையுயர்ந்த தயாரிப்புகளில் ஒன்றான செர்பென்டி ஏடெர்னா நெக்லஸ் அக்குழுமத்தின் சிறப்பம்சமாகும். இந்த உயர்ரக நகை சுமார் 140 காரட் வைரங்களைக் கொண்டுள்ளது மற்றும் முடிக்க 2,800 மணிநேரம் ஆனது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கேரியின் கூற்றுப்படி, இது 20 காரட்டுகளுக்கு மேல் தோராயமான வைரத்தைக் கொண்டுள்ளது. இது ஏழு பேரிக்காய் வடிவ மொட்டுகளாக வெட்டப்பட்டுள்ளது. அவை மொத்தமாக 140 காரட் எடையைக் கொண்டுள்ளன. இந்த நேர்த்தியான படைப்பு, வியக்க வைக்கும் வகையில் $43M என மதிப்பிடப்பட்டுள்ளது.