விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவான 'Sigma' படத்தின் அப்டேட்
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படமான 'சிக்மா' (Sigma)-வின் போஸ்டர் (First-Look Poster) இன்று நவம்பர் 10ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவை நெருங்கி உள்ளது. இப்படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஃபரியா அப்துல்லா நடிக்கிறார். இவர்களுடன், ராஜு சுந்தரம், அன்பு தாசன், யோக் ஜாப்பீ, சம்பத் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு இசையமைத்திருப்பவர் தமன் ஆவார். இது, ஆக்ஷன், அட்வென்ச்சர் மற்றும் நகைச்சுவை கலந்து உருவான கதை எனக்கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Presenting the Title of #JSJ01 - #SIGMA⚡
— Lyca Productions (@LycaProductions) November 10, 2025
The quest begins. 🎯@official_jsj @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @sundeepkishan @MusicThaman @Cinemainmygenes @krishnanvasant @Dir_sanjeev #BenjaminM @hariharalorven @ananth_designer @SureshChandraa @UrsVamsiShekar… pic.twitter.com/Dggm6zx3Il
படப்பிடிப்பு
படப்பிடிப்பு நிலை மற்றும் கதைக்கரு
மொத்தம் 65 நாட்கள் நான்கு மாதங்களாக நடந்த படப்பிடிப்பில், 95% பணிகள் முடிவடைந்துவிட்டதாக லைகா புரொடக்ஷன்ஸ் அறிவித்துள்ளது. ஒரேயொரு பாடல் மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளது. 'சிக்மா' என்பது சமூக எதிர்பார்ப்புகளுக்கு உட்படாத, தன் சொந்த பாதையில் செல்லும் தனித்தன்மை வாய்ந்த நபரை பற்றியது. மறைந்திருக்கும் பொக்கிஷத்தைத் தேடும் வேட்டையும், அதிரடியான கொள்ளைச் சம்பவங்களும் நிறைந்த, பரபரப்பான ஆக்ஷன்-அட்வென்ச்சர் நகைச்சுவைப் படமாக இது உருவாகியுள்ளதாம். இந்த படம் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது. விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கப்பட்டு, படத்தை 2026ஆம் ஆண்டின் கோடை காலத்தில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.