முதல் படத்துலயே இப்படியொரு மேக்கிங்கா! சந்தீப் கிஷன் - ஜேசன் சஞ்சய்யின் சிக்மா டிரெய்லர் வெளியானது
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக இருந்து தற்போது தமிழக முதல்வராக இருக்கும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் சிக்மா திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) வெளியிடப்பட்டது. தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகியுள்ள இந்த ஆக்ஷன் கிரைம் த்ரில்லர் திரைப்படத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா மற்றும் சம்பத் ராஜ் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். வரும் அக்டோபர் 2 அன்று படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கதைக்களம்
ரேடியோ ஜாக்கி முதல் பிரமாண்ட கொள்ளை வரையிலான கதைக்களம்
2 நிமிடங்கள் 16 வினாடிகள் கொண்ட இந்த டிரெய்லரில், சந்தீப் கிஷன் ஒரு ரேடியோ ஹோஸ்ட்டாக அறிமுகமாகிறார்.
ஒரு நல்ல காரணத்திற்காக அவர் பாதாள உலக தாதாவான கொட்லாபாடி வீரய்யா ரெட்டியின் (சம்பத் ராஜ்) சட்டவிரோத பேரரசை எதிர்த்து பிரமாண்டமான கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுகிறார்.
சூதாட்டம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளுடன் உருவக்கப்பட்டுள்ள இந்த டிரெய்லர் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அறிமுக இயக்குநர்
அறிமுக இயக்குநராக முத்திரை பதித்துள்ள ஜேசன் சஞ்சய்
சுபாஸ்கரன் தலைமையிலான லைகா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரமாண்டமாகத் தயாரித்துள்ளது.
இசை அமைப்பாளர் தமன் எஸ் பின்னணி இசையமைக்க, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
முதல் படம் போலத் தெரியாத அளவுக்குப் மேக்கிங்கில் ஜேசன் சஞ்சய் அசத்தியுள்ளதாக சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மேலும் செப்டம்பர் 18 அன்று நடைபெற்ற ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
The heist begins. 🔥 Presenting the action-packed Trailer of #Sigma ⚡️ The quest is on 💥
— Jason Sanjay Official (@official_jsj) September 18, 2026
Tamil 🔗 https://t.co/P0AV9tmnUD
Telugu 🔗 https://t.co/8HhLfzuTN8#SigmaInCinemasOct2@official_jsj @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @sundeepkishan @MusicThaman… pic.twitter.com/CZ3XVj2Dtp
காந்தி ஜெயந்தி
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று பிரமாண்ட ரிலீஸ்
ஜேசன் சஞ்சய்யின் இயக்கத்தில் உருவாகியுள்ள சிக்மா திரைப்படம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது.
இந்தத் திரைப்படம் இந்தி திரைப்படமான த்ரிஷ்யம் 3 படத்திற்குப் போட்டியாகக் களம் காணவுள்ளது.
லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான விளம்பர உத்திகள் மற்றும் தரமான ஆக்ஷன் காட்சிகள் காரணமாக, சிக்மா திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் ஒரு புதிய சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.