Page Loader
நடிகை ஸ்ரீதேவியின் நினைவு நாளுக்கு, அவரது மகள் ஜான்வி கபூர் இட்ட நெகிழ்ச்சியான பதிவு
தனது தாய் ஸ்ரீதேவி குறித்து உருக்கமான பதிவை இட்ட நடிகை ஜான்வி கபூர்

நடிகை ஸ்ரீதேவியின் நினைவு நாளுக்கு, அவரது மகள் ஜான்வி கபூர் இட்ட நெகிழ்ச்சியான பதிவு

எழுதியவர் Venkatalakshmi V
Feb 21, 2023
04:43 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் பிறந்து, இந்தியாவின் முன்னணி நடிகையாக வலம்வந்த, நடிகை ஸ்ரீதேவியின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள், இந்த வாரம் வரவுள்ளது. இந்நாளில், அவரை நினைவுகூரும் விதமாக, அவரது மகள் ஜான்வி கபூர், தனது சமூக வலைத்தளத்தில், ஒரு நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், "உங்களை எல்லா இடங்களிலும் நான் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன். உங்களை பெருமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அனைத்து செயல்களையும் செய்கிறேன். நான் எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் அனைத்தும் உங்களிடம் தொடங்கி, உங்களிடமே முடிகிறது" என்று கூறியுள்ளார். ஸ்ரீதேவி, கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று, துபாயில், மாரடைப்பால் உயிரிழந்தார். ஸ்ரீதேவிக்கு, ஜான்வி, குஷி என இரு மகள்கள் உள்ளனர். இதில் ஜான்வி, ஹிந்தி படவுலகில் நடித்துவருகிறார்.

Instagram அஞ்சல்

ஸ்ரீதேவி பற்றி உருக்கமான பதிவிட்ட மகள் ஜான்வி