LOADING...
பெங்களூருவில் ரூ.2000-ஐ தொட்ட 'ஜனநாயகன்' டிக்கெட் விலை; தமிழகத்தில் ஏன் முன்பதிவு தொடங்கவில்லை?
'ஜன நாயகன்' வரும் ஜனவரி 9 அன்று வெளியாகிறது

பெங்களூருவில் ரூ.2000-ஐ தொட்ட 'ஜனநாயகன்' டிக்கெட் விலை; தமிழகத்தில் ஏன் முன்பதிவு தொடங்கவில்லை?

எழுதியவர் Venkatalakshmi V
Jan 05, 2026
03:03 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜய் திரைத்துறையில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட உள்ள நிலையில், அவரது கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' வரும் ஜனவரி 9 அன்று வெளியாகிறது. இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு விண்ணை தொட்டுள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் டிக்கெட் விலைகள் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளன. குறிப்பாக பெங்களூருவில் உள்ள முக்கிய திரையரங்குகளில் அதிகாலை 6:30 மணி காட்சிக்கான டிக்கெட்டுகள் ரூ.1800 முதல் ரூ.2000 வரை விற்பனை செய்யப்படுகின்றன. இவ்வளவு அதிக விலை இருந்தபோதிலும், ஆன்லைனில் டிக்கெட்டுகள் தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிட்டன. பெங்களூருவில் காலை காட்சிகளுக்கான குறைந்தபட்ச விலையே ரூ. 800 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கேரளாவின் கொச்சியில் அதிகபட்ச விலையாக ரூ. 350 மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகம்

தமிழகத்தில் முன்பதிவுகள் துவங்கவில்லை

அண்டை மாநிலங்களில் முன்பதிவுகள் துவங்கி, டிக்கெட்டுகள் தீர்ந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்னும் 'ஜனநாயகன்' படத்திற்கான முன்பதிவு தொடங்கவில்லை. சென்சார் போர்டு (CBFC) சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள் மற்றும் திரையரங்கு பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் காரணமாக தமிழகத்தில் முன்பதிவு தாமதமாகி வருவதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

விவரங்கள்

'ஜன நாயகன்' படம் குறித்த விவரங்கள் 

எச். வினோத் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் துணிச்சலான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பாபி தியோல் வில்லனாகவும், பூஜா ஹெக்டே நாயகியாகவும் நடித்துள்ளனர். இது விஜய்யின் 69-வது மற்றும் கடைசிப் படம் என்பதால் உலகம் முழுவதும் 'ஜனநாயகன்' திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. படம் வெளியாவதற்கு முன்பே உலகம் முழுவதும் முன்பதிவு மூலம் மட்டுமே சுமார் ரூ. 25 கோடிக்கும் அதிகமான வசூலை இப்படம் ஈட்டியுள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள இந்தப் படம் தமிழ் சினிமாவின் பல சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement