LOADING...
'ஜன நாயகன்' ரிலீஸ்: தணிக்கை குழு மோதல், சாத்தியமான ரிலீஸ் தேதிகள்: ஒரு பார்வை
தணிக்கை சான்றிதழ் பெறுவதில் நிலவும் சிக்கலால், ஜன நாயகன் பொங்கல் ரிலீஸை தவறவிட்டது

'ஜன நாயகன்' ரிலீஸ்: தணிக்கை குழு மோதல், சாத்தியமான ரிலீஸ் தேதிகள்: ஒரு பார்வை

எழுதியவர் Venkatalakshmi V
Jan 20, 2026
12:12 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜய் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன்னதாக வெளியாகும் இறுதி திரைப்படமான 'ஜன நாயகன்', தணிக்கை சான்றிதழ் பெறுவதில் நிலவும் சிக்கலால் பொங்கல் ரிலீஸை தவறவிட்டது. இந்நிலையில், ஜனவரி 23-ஆம் தேதியை படக்குழுவினர் தற்போது மிக சிறந்த ரிலீஸ் தேதியாக கருதுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், ஜனவரி 26-குடியரசு தினத்தை முன்னிட்டு கிடைக்கும் நான்கு நாட்கள் நீண்ட வார இறுதி விடுமுறை ஆகும். மேலும், அந்த சமயத்தில் ஹாலிவுட் அல்லது பிற மொழிகளில் பெரிய படங்கள் எதுவும் வெளியாகாதது, விஜய் படத்திற்கு திரையரங்குகளை அதிக அளவில் ஒதுக்க உதவும். ஒருவேளை இந்தத் தேதியைத் தவறவிட்டால், ஜனவரி 30 அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் படத்தை வெளியிடவும் தயாரிப்பு நிறுவனமான KVN திட்டமிட்டுள்ளது.

நீதிமன்றம்

நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது

தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. தணிக்கைக் குழுவின் (CBFC) மறுஆய்வுக் குழுவின் முடிவுகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துள்ளது. இன்னும் சற்று நேரத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது. எச். வினோத் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அரசியல் பின்னணி கொண்ட அதிரடித் திரைப்படமாக இது உருவாகியுள்ளதால், தணிக்கைக் குழுவின் முடிவை நோக்கி ஒட்டுமொத்தத் திரைத்துறையும் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement