LOADING...
'ஜன நாயகன்' வெளியீடு தாமதமாவதால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு ரூ.100 கோடி இழப்பு
திரையரங்குகளுக்கு சுமார் 100 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்

'ஜன நாயகன்' வெளியீடு தாமதமாவதால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு ரூ.100 கோடி இழப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Feb 03, 2026
01:53 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவில் ஒரு பெரிய நட்சத்திரத்தின் படம் வெளியாகிறது என்றால், அது திரையரங்கு உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய திருவிழாவாகும். ஆனால், தற்போது ஒரு முன்னணி சூப்பர் ஸ்டாரின் படம் வெளியாவதில் ஏற்பட்டுள்ள இழுபறி, தமிழ்நாட்டுத் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 'ஜன நாயகன்' படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகும் என நம்பி, பல திரையரங்கு உரிமையாளர்கள் மற்ற படங்களைத் திரையிடாமல் தியேட்டர்களை ஒதுக்கி வைத்திருந்தனர். தற்போது படம் வெளியாகாததால், டிக்கெட் முன்பதிவு வருமானம் இன்றி தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளுக்கு சுமார் 100 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிக்கல்

ஜன நாயகன் vs சென்சார் சிக்கல்

'ஜன நாயகன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம், கடந்த சில நாட்களாக சென்சார் சான்றிதழ் பெறுவதில் சிக்கல்களைச் சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது. சென்சார் போர்டின் மறுஆய்வுக் குழுவிடம் (Revising Committee) இந்தப் படம் உள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் மௌனம் காத்து வருகின்றனர். படத்தின் சில காட்சிகள் அல்லது வசனங்கள் தொடர்பாக எழுந்த விவாதங்களே இந்த தாமதத்திற்கு காரணம் என தெரிகிறது.

வேதனை

திரையரங்கு உரிமையாளர்கள் வேதனை

"பெரிய பட்ஜெட் படங்கள் இதுபோன்று கடைசி நேரத்தில் தள்ளிப்போவது எங்களை போன்ற சிறு திரையரங்கு உரிமையாளர்களை கடுமையாக பாதிக்கும். ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்குவது முதல் மின்சாரக் கட்டணம் வரை பல செலவுகளை ஈடுகட்ட முடியாமல் தவிக்கிறோம்" என உரிமையாளர்கள் தரப்பில் வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனம் விரைவில் இப்பிரச்சினையைச் சரிசெய்து, படத்திற்கான சென்சார் சான்றிதழை பெற்று வெளியீட்டுத் தேதியை அறிவிக்கும் என ரசிகர்கள் மற்றும் சினிமா வர்த்தகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Advertisement