மலேசியாவில் தளபதி திருவிழா: 'ஜனநாயகன்' ஆடியோ வெளியீட்டை இந்தியாவில் எப்போது? எங்கு பார்க்கலாம்? முழு விவரங்கள்
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய் தனது அரசியல் வருகைக்கு முன்னதாக நடிக்கும் கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. 'தளபதி திருவிழா' என்று அழைக்கப்படும் இந்த பிரம்மாண்ட நிகழ்வு, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற உள்ளது. முழு விவரங்கள் இங்கே:-
நேரம் மற்றும் இடம்
ஆடியோ வெளியீடு: தேதி, நேரம் மற்றும் இடம்
ஜனநாயகன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சனிக்கிழமை (டிசம்பர் 27) அன்று மலேசியாவில் உள்ள புக்கிட் ஜலில் திறந்தவெளி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த விழா இந்திய நேரப்படி மாலை 3:30 மணிக்குத் தொடங்கி சுமார் 5 முதல் 6 மணி நேரம் வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வில் சுமார் 80,000 முதல் 1 லட்சம் ரசிகர்கள் கலந்துகொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளதால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. நடிகர் விஜய் ஏற்கனவே மலேசியா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒளிபரப்பு
நேரலை மற்றும் ஒளிபரப்பு விவரங்கள்
மலேசியாவிற்கு நேரில் செல்ல முடியாத ரசிகர்களுக்காக, இந்த விழாவினை ஒளிபரப்பச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, அதன்படி, இந்த விழா முழுமையாகப் பதிவு செய்யப்பட்டு, வரும் ஜனவரி 4, 2026 அன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். மேலும், அதே நாளில் (ஜனவரி 4) ஜீ தமிழ் ஓடிடி தளத்தில் மாலை 4:30 மணி முதல் இரவு 10:30 மணி வரை இந்த நிகழ்வை ரசிகர்கள் காணலாம்.
திரைப்படம்
திரைப்படம் குறித்த முக்கிய தகவல்கள்
எச்.வினோத் இயக்கத்தில், அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, மமிதா பைஜூ மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 'ஜனநாயகன்' திரைப்படம் வரும் ஜனவரி 9, 2026 அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இது விஜயின் 69வது மற்றும் இறுதித் திரைப்படம் என்பதால் உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.