ஜெயிலர் 2 செட் மேக்கிங்: கலை இயக்குநர் கிரண் பகிர்ந்த பிரத்யேக வீடியோ
செய்தி முன்னோட்டம்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் கலை வேலைப்பாடுகள் மற்றும் படப்பிடிப்பு தள உருவாக்க வீடியோவை கலை இயக்குநர் டி.ஆர்.கே. கிரண் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அடர்ந்த மலைப் பிரதேசம் மற்றும் பசுமையான மலைப்பாதையை ஒட்டிய ஒரு கிராமத்துப் பின்னணியில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட வணிக வளாகம் மற்றும் சூப்பர் மார்க்கெட் தெருவின் செட் அமைப்பு திரைப்பட ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
வரவேற்பு
இணையத்தில் வைரலாகும் பிரத்யேக மேக்கிங் வீடியோ
'ஜெயிலர்' முதல் பாகத்தில் தனது பிரம்மாண்டமான மற்றும் யதார்த்தமான செட் அமைப்புகளுக்காகப் பாராட்டுகளைப் பெற்ற கலை இயக்குநர் கிரண், இரண்டாம் பாகத்திலும் தனது கலை நயத்தால் அடுத்தகட்ட காட்சி விருந்தைப் படைத்துள்ளார்.
படப்பிடிப்புத் தளத்தில் தொழிலாளர்கள மும்முரமாக வேலை செய்யும் காட்சிகளுடன் "#jailer2 supermarket" என்ற ஹேஷ்டேக்குடன் அவர் வெளியிட்டுள்ள இந்த மேக்கிங் காட்சிகள், ரஜினிகாந்த் ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களால் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு பெரும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#jailer2 supermarket pic.twitter.com/iA0bZ5n8Qk
— drk.kiran (@KiranDrk) October 19, 2026