Loading...
ஜெயிலர் 2 X விமர்சனம்: ரஜினிகாந்தின் மாஸ் மற்றும் நெல்சனின் பிளாக்பாஸ்டர் சம்பவம்
'ஜெயிலர் 2' திரைப்படம் இன்று உலகமெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.

ஜெயிலர் 2 X விமர்சனம்: ரஜினிகாந்தின் மாஸ் மற்றும் நெல்சனின் பிளாக்பாஸ்டர் சம்பவம்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 15, 2026
07:57 am

செய்தி முன்னோட்டம்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் 'டைகர்' முத்துவேல் பாண்டியனாக அவதாரம் எடுத்துள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் இன்று உலகமெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் படத்தை பார்த்த ரசிகர்கள், எக்ஸ் தளத்தில் தங்களது விமர்சனங்களை உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர். படம் பார்த்த ரசிகர்கள் முதல் பாதிக்கு 5/5 மதிப்பீடு வழங்கி, நெல்சன் மீண்டும் தனது அதிரடி மாஸ் சம்பவத்தை செய்துள்ளதாகக் கொண்டாடி வருகின்றனர்.

விமர்சனம்

"திமிங்கலம் போன்ற ரஜினியின் வெறித்தனம்": ரசிகர்களின் விமர்சனம்

முதல் பாதியின் விறுவிறுப்பைக் குறிப்பிட்ட ரசிகர் ஒருவர், "வில்லன்கள் தங்களை வெள்ளைச் சுறா என நினைத்து வேட்டையாட வருகிறார்கள், ஆனால் ரஜினிகாந்த் அவர்களை வேட்டையாடும் 'கொலையாளித் திமிங்கலம்' என்பதை பின்னர்தான் உணர்கிறார்கள்" என ரஜினியின் மாஸ் ஆளுமையை விவரித்துள்ளார்.

திரையரங்குகளில் இடைவேளைக்கு முந்தைய காட்சி, பாலம் காட்சி, டீக்கடை காட்சி மற்றும் அனிருத்தின் வெறித்தனமான பின்னணி இசை ஆகியவை ரசிகர்களுக்கு சிலிர்ப்பையூட்டும் அத்தியாயங்களாக அமைந்துள்ளன.

நியூஜெர்சி உட்பட வெளிநாடுகளில் முதல் 7 காட்சிகளும் 100% டிக்கெட் முன்பதிவுடன் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடி சாதனை படைத்துள்ளன.

யோகி பாபு மற்றும் நெல்சனின் வழக்கமான நகைச்சுவை, உணர்வுபூர்வமான காட்சிகளுடன் கச்சிதமாகப் பொருந்தியுள்ளதாகப் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT