Loading...
சென்சார் பணிகளை முடித்த 'ஜெயிலர் 2': படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியது தணிக்கை வாரியம்
ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் 'UA 16+' சான்றிதழ் வழங்கியுள்ளது.

சென்சார் பணிகளை முடித்த 'ஜெயிலர் 2': படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியது தணிக்கை வாரியம்

எழுதியவர் Vasuki
Oct 06, 2026
06:52 pm

செய்தி முன்னோட்டம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள பிரம்மாண்டத் திரைப்படமான 'ஜெயிலர் 2' படத்தின் தணிக்கைப் பணிகள் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளன. சென்னை மண்டல மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தால் (CBFC) ஆய்வு செய்யப்பட்ட இப்படத்திற்குத் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அதிரடி ஆக்ஷன் காட்சிகள் காரணமாக படத்திற்கு 'A' சான்றிதழ் வழங்கப்படலாம் எனப் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, குடும்ப ரசிகர்கள் மற்றும் இளைஞர்கள் கண்டு ரசிக்கும் வகையில் 'U/A 16+' சான்றிதழை பெற்றுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தணிக்கைச் சான்றிதழ்

2 மணி நேரம் 45 நிமிடங்கள் ரன்-டைம்

சென்சார் வாரியத்தின் சான்றிதழ் விவரங்களின்படி, 'ஜெயிலர் 2' படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் 18 விநாடிகளாக (165.18 நிமிடங்கள்) உறுதி செய்யப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது தணிக்கை நடைமுறைகளும் முழுமையாக நிறைவடைந்துள்ளன.

நெல்சன் இயக்கத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், வித்யா பாலன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளத்துடன் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

வெளிநாட்டு முன்பதிவுகளில் புதிய சாதனை படைத்து வரும் சூழலில், தணிக்கைச் சான்றிதழ் முறைப்படி கிடைத்துள்ளதால் வரும் அக்டோபர் 15 அன்று ரஜினிகாந்தின் முத்துவேல் பாண்டியன் வேட்டை உலகமெங்கும் திரையரங்குகளில் தொடங்குகிறது.

ADVERTISEMENT