Page Loader
ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட்டின் இரண்டாவது ப்ரீ-வெட்டிங் கொண்டாட்டம் எங்கே தெரியுமா?
இந்த இரண்டாவது கொண்டாட்டம் ஒரு சொகுசு கப்பலில் நடைபெற உள்ளது

ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட்டின் இரண்டாவது ப்ரீ-வெட்டிங் கொண்டாட்டம் எங்கே தெரியுமா?

எழுதியவர் Venkatalakshmi V
May 28, 2024
01:04 pm

செய்தி முன்னோட்டம்

இத்தாலியில் நடைபெறவுள்ள ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் இரண்டாவது ப்ரீ-வெட்டிங் கொண்டாட்டத்தின் அழைப்பிதழில் 'La Vite E Un Viaggio' என்று எழுதப்பட்டுள்ளது. அதாவது 'வாழ்க்கை ஒரு பயணம்' என அர்த்தமாம். இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்திபடி, இந்த இரண்டாவது கொண்டாட்டம் ஒரு சொகுசு கப்பலில் நடைபெற உள்ளது. பல பாலிவுட் பிரபலங்கள் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 300 விஐபி விருந்தினர்கள் இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்த கொண்டாட்டங்கள், இத்தாலியில் தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் முடிவடைகிறது. முன்னதாக, நேற்று 'தல' தோனி மற்றும் அவரது மனைவி, நடிகர்கள் ரன்வீர் சிங், ரன்பீர் கபூர்-ஆலியா பட் ஆகியோர் மும்பை விமான நிலையத்திலிருந்து இத்தாலிக்கு பயணப்பட்டனர்.

விழா நிகழ்வு

இரண்டாவது ப்ரீ-வெட்டிங் கொண்டாட்டங்கள்

இந்த விழாவில் தம்பதிகள் பகிர்ந்து கொள்ளும் அந்தரங்கமான தருணங்களைப் பாதுகாப்பதற்காக, சொகுசு கப்பலில் போன் பயன்படுத்த கூடாது என்ற கண்டிப்பான கொள்கை அமலில் இருக்கும் என செய்தி தெரிவிக்கிறது. ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஜூலை 12 அன்று திருமணம் செய்து கொள்ளவுள்ளனர். இந்த ஜோடி கடந்த மார்ச் மாதம் குஜராத்தின் ஜாம்நகரில் இதே போன்ற மிக பிரமாண்டமான ப்ரீ-வெட்டிங் கொண்டாட்டத்தினை நடத்தினர். உலக தலைவர்கள், ஹாலிவுட் பிரபலங்கள், இந்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் நடிகர்-நடிகைகள் என மூன்று நாள் பிரமாண்டமான விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது நினைவிருக்கலாம்.

embed

Twitter Post

After a grand three-day affair in March 2024 at Jamnagar, Gujarat, industrialist Mukesh Ambani's son #AnantAmbani & businessman Viren Merchant's daughter #RadhikaMerchant are set for another #Prewedding celebration. This time, the functions will take place in #Italy and #France. pic.twitter.com/sklisGqgGW— DT Next (@dt_next) May 27, 2024