LOADING...
காதலையும் சொல்ல முடியாது, காரணத்தையும் சொல்ல முடியாது: அதர்வாவின் 'இதயம் முரளி' பட டிரெய்லர் வெளியானது

காதலையும் சொல்ல முடியாது, காரணத்தையும் சொல்ல முடியாது: அதர்வாவின் 'இதயம் முரளி' பட டிரெய்லர் வெளியானது

எழுதியவர் Sekar Chinnappan
Jul 04, 2026
08:21 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் திரையுலகில் என்றும் நீங்கா இடம் பிடித்த மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா, தனது தந்தையின் நடிப்பில் வெளியாகி பெரும் காவியமான இதயம் படப் பின்னணியை மையமாகக் கொண்டு நடித்துள்ள இதயம் முரளி திரைப்படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது. டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கியுள்ள இத்திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தத் திரைப்படத்தின் தமிழ்நாட்டு விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

காதல்

காதலையும் சொல்ல முடியாமல் தவிக்கும் அதர்வா

இந்த டிரெய்லரின் ஆரம்பமே, "என்ன மாதிரி காதலைச் சொல்ல முடியாதவங்க எத்தனையோ பேரு இருக்காங்க, அவங்களால காதலையும் சொல்ல முடியாது, அதற்கான காரணத்தையும் சொல்ல முடியாது" என்ற அழுத்தமான வரிகளோடு தொடங்குகிறது. 90 களில் வெளியான இதயம் படத்தில் நடிகர் முரளி எப்படி தனது காதலை இறுதிவரை சொல்ல முடியாமல் மனதுக்குள்ளேயே பூட்டி வைத்திருப்பாரோ, அதே போன்ற ஒரு அழுத்தமான ஒன்-சைட் லவ் கதைக் களத்தில் அதர்வா நடித்துள்ளார் என்பதை இந்த டிரெய்லர் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

முக்கிய நட்சத்திரங்கள்

படத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய நட்சத்திரங்கள்

இந்த திரைப்படத்தில் அதர்வாவுடன் இணைந்து கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் ஃபஹத் பாசில், நட்டி நட்ராஜ், தமன், பிரீத்தி முகுந்தன், சின்னி ஜெயந்த், ரக்ஷன் மற்றும் பரிதாபங்கள் சுதாகர், டிராவிட் செல்வம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தில் இருந்து தமன் பாடி, பாடலாசிரியர் விவேக் எழுதிய 'கட்டழகி' பாடல் வெளியாகி சோசியல் மீடியாக்களில் தற்பொழுது வரை பெரிய அளவில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. 90ஸ் கிட்ஸ் மற்றும் தற்போதைய இளைஞர்கள் என அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் டிரெய்லர் இருக்கும் நிலையில், படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement