
இசையமைப்பாளரும், பாடகருமான ஹரிஹரனின் பிறந்த நாள் இன்று!
செய்தி முன்னோட்டம்
மும்பையில், இசைக்குடும்பத்தில் பிறந்தவர் ஹரிஹரன். இவரது பெற்றோர்கள் இருவரும் பாரம்பரிய சங்கீதத்தில் பிரபலமானவர்கள். அதனால் இவரும் சிறு வயதிலேயே சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றார்.
அதன் பிறகு, பல்வேறு இசை போட்டிகளில் பங்கு பெற்றவர், கசல் என்று அழைக்கப்படும் ஹிந்துஸ்தானி இசையிலும் தேர்ச்சி பெற்றவர்.
அவரும், லெஸ்லி லூயிஸ் என்பவரும் இணைந்து கொலோனியல் கசின்ஸ் என்ற இசை ஆல்பம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார்.
1992 இல், ரோஜா திரைப்படத்தின் மூலம், ஏ.ஆர். ரஹ்மானால் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார் ஹரிஹரன்.
அதன் பிறகு, இன்று வரை, கிட்டத்தட்ட 500 பாடலுக்கும் மேல் தமிழ் மொழியில் பாடியுள்ளார்.
இவரின் 68வது பிறந்த நாள் இன்று.
ஹரிஹரன்
பாடகர், நடிகர், இசையமைப்பாளர் ஹரிஹரன்
ஹரிஹரன், 2 தேசியவிருதுகள் வென்றுள்ளார்.
சுவாரஸ்யமாக, 'மின்சார கனவு' படத்தில் அவர் பாடியிருந்த 'வெண்ணிலவே வெண்ணிலவே' பாடலில் நடித்த பிரபுதேவாவிற்கும், இன்று பிறந்தநாள்.
ஹரிஹரனுக்கு பாடல் பாடுவது மட்டுமின்றி, நடிக்கவும் பிடிக்குமாம். கல்லூரி காலங்களில் நாடகங்களில் நடித்த அனுபவம் உண்டு என செய்திகள் தெரிவிக்கின்றன.
அதனால், குஷ்பூவுடன், 'பவர் ஆப் வுமன்' என்ற படத்தில் நடித்தார்.
அதனை தொடர்ந்து 'பாய்ஸ்' படத்திலும் சிறு வேடத்தில் நடித்திருந்தார்.
'மோதி விளையாடு' என்ற திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
A.R.ரஹ்மான் மட்டுமல்லாமல், தேவா, வித்யாசாகர் போன்றவர்கள் இசையில் ஹரிஹரன் பாடிய பாடல்கள் அனைத்துமே ஹிட் ரகம் தான்.
இவரின் இரு பிள்ளைகளான, அக்ஷய் ஹரிஹரன் மற்றும் லாவண்யா ஹரிஹரன், இருவரும் தற்போது வளர்ந்து வரும் பாடகர்கள்.