Loading...
இணையத்தில் தீயாய் பரவும் சூர்யாவின் 'சீன்' படக்கதை: உண்மை என்ன?
சூர்யா நடிக்கும் சீன் திரைப்பட டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

இணையத்தில் தீயாய் பரவும் சூர்யாவின் 'சீன்' படக்கதை: உண்மை என்ன?

எழுதியவர் Vasuki
Oct 06, 2026
06:39 pm

செய்தி முன்னோட்டம்

'ரோமாஞ்சம்', 'ஆவேஷம்' படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா, நஸ்லென் மற்றும் நஸ்ரியா நசீம் இணைந்து நடித்து வரும் 'சீன்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் இப்படத்தின் கதைக்களம் எனக்கூறி புதிய தகவல் ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. சூர்யா விபத்தில் அல்லது தாக்குதலில் தனது பார்வையை இழக்க நேரிடுவதாகவும், அதன் பின்னர் தொடர் கொலைகளைச் செய்யும் சைக்கோ கில்லரான நஸ்லெனை, நஸ்ரியா மற்றும் தனது குழுவினரின் உதவியுடன் தேடிக் கண்டுபிடித்து பழிவாங்குவதே படத்தின் கதை என்றும் இணையத்தில் நெட்டிசன்கள் பல ஊகங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

படக்குழுவின் நிலைப்பாடு

டீசரில் கிளம்பிய பார்வையற்ற கதாபாத்திர வதந்தி

'சீன்' திரைப்படத்தின் டீசரில் சூர்யா 'டிஎஸ்பி இன்பராஜ்' என்ற வித்தியாசமான காவல் அதிகாரியாகத் தோன்றுகிறார்.

அதில் அவர் கண்ணாடி அணிந்திருப்பதும், மற்றவர்கள் தோளைப் பிடித்து நடப்பதும், நேராகப் பார்க்காமல் சுடுவதும் போன்ற காட்சிகளைக் கவனித்த ரசிகர்கள், அவர் பார்வையற்ற அதிகாரியாக நடிக்கிறாரா எனப் பல யூகங்களை எழுப்பி வருகின்றனர்.

வில்லனைத் தனது கூரிய மதிநுட்பத்தால் எதிர்கொள்வார் என்றும் பேசி வருகின்றனர். ஆனால், இந்த வதந்திகளைப் படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

இயக்குநர் ஜித்து மாதவனின் வழக்கமான பாணியில், இது டார்க் காமெடி மற்றும் அதிரடி கலந்த திரைப்படமாகவே உருவாகிறது.

சூர்யாவின் கதாபாத்திரம் திருப்பங்கள் நிறைந்த கலகக்கார போலீஸ் அதிகாரி மட்டுமே தவிர, பார்வையற்றவர் என்பது டீசரை வைத்து கிளப்பப்பட்ட வெறும் அனுமானமே ஆகும்.

ADVERTISEMENT