LOADING...
விஜய்யின் 'ஜன நாயகன்', 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? ஒரிஜினல் இயக்குனர் அனில் ரவிபுடி என்ன சொல்கிறார்?
'ஜன நாயகன்' வெளியீட்டு விழாவில் இயக்குனர் எச்.வினோத் தெளிவுபடுத்தினார்.

விஜய்யின் 'ஜன நாயகன்', 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? ஒரிஜினல் இயக்குனர் அனில் ரவிபுடி என்ன சொல்கிறார்?

எழுதியவர் Venkatalakshmi V
Dec 31, 2025
05:57 pm

செய்தி முன்னோட்டம்

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம், 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் என்று தகவல் பரவி வருகிறது. இந்த சர்ச்சை குறித்து சமீபத்தில் நடந்த 'ஜன நாயகன்' வெளியீட்டு விழாவில் இயக்குனர் எச்.வினோத் தெளிவுபடுத்தினார். அவர், " இது பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று நிறைய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது ரீமேக்கா இல்லையா என்று இப்போதைக்கு என்னால் சொல்ல முடியாது. கேள்வி எழுப்புபவர்கள், முதல் காட்சி முடியும் வரை காத்திருங்கள். அப்போது உங்களுக்கு பதில் கிடைக்கும். டிரெய்லரும் பாடல்களும் உங்களுக்கு மேலும் தெளிவைத் தரும். ஆனால் நான் சொல்லக்கூடியது என்னவென்றால், இது ஒரு தளபதி படம்." என்றார்.

அனில் ரவிபுடி

'பகவந்த் கேசரி' படத்தின் இயக்குனர் அனில் ரவிபுடி தற்போது மவுனம் கலைத்துள்ளார்

சமீபத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து கேட்கப்பட்ட போது, 'பகவத் கேசரி' படத்தின் இயக்குனர் அனில் ரவிபுடி பதிலளித்தார். அவர் கூறுகையில், "விஜய் சார் ஒரு பண்பாளர். சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்த அவர் நடிக்கும் கடைசி படம் இது. அதனால், அவரது கடைசி படத்தில் என் பங்கு (பகவந்த் கேசரி) இருக்கிறதா என்பதை அறிய படம் வெளியாகும் வரை காத்திருப்போம். படம் வெளியான பிறகு, அதை எப்படி கையாண்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும், அப்போதுதான் பேசுவது சரியாக இருக்கும். அதுவரை இதை ரீமேக் என்று சொல்ல வேண்டாம், இது தளபதி விஜய் படம்" என்று தெரிவித்துள்ளார்.

Advertisement