அர்ஜுன் தாஸுக்கு இந்த வாரமே நிச்சயதார்த்தமா? பரவிய தீயாய் கிசுகிசு; இதோ உண்மை
செய்தி முன்னோட்டம்
'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் தனது மிரட்டலான நடிப்பு மற்றும் கம்பீரமான கரகர குரலால் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் அர்ஜுன் தாஸ். சமீபத்தில் அஜித் குமாருடன் 'குட் பேட் அக்லி' உள்ளிட்ட பெரிய படங்களில் நடித்து பிஸியாக இருக்கும் அர்ஜுன் தாஸ் குறித்து, கடந்த சில தினங்களாகத் திரையுலகில் ஒரு புதிய தகவல் தீயாகப் பரவத் தொடங்கியது. அவருக்கு இந்த வாரமே ரகசியமாக நிச்சயதார்த்தம் நடக்கவிருப்பதாகவும், அதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. மணமகள் யார், இது காதல் திருமணமா என்ற கேள்விகள் இணையத்தை ஆக்கிரமித்த நிலையில், தற்போது இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகியுள்ளது.
அறிக்கை
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி - பிஆர்ஓ அறிக்கை
அர்ஜுன் தாஸின் திருமணம் குறித்து பரவிய செய்திகள் அனைத்தும் வெறும் வதந்தியே என அவரது PRO அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் (X) பதிவில்,"அன்பார்ந்த அனைவருக்கும், நடிகர் அர்ஜுன் தாஸின் திருமணம் குறித்துச் சமூக வலைத்தளங்களில் உலா வரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்கிறோம். ஊடக நண்பர்கள் இத்தகைய செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு எங்களைத் தொடர்பு கொண்டு உண்மையைச் சரிபார்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Dear all,
— Yuvraaj (@proyuvraaj) May 27, 2026
This to clarify that there is no truth in rumours doing the rounds on actor @iam_arjundas's wedding. Request friends from the media to please check with us and verify facts before putting out such news reports. pic.twitter.com/yKyQtAR9rU