NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / தொடர் தோல்வி; மார்க்கெட் இழக்கும் நிவின் பாலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    தொடர் தோல்வி; மார்க்கெட் இழக்கும் நிவின் பாலி
    மார்க்கெட் இழக்கும் நிவின் பாலி

    தொடர் தோல்வி; மார்க்கெட் இழக்கும் நிவின் பாலி

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 25, 2023
    06:51 pm

    செய்தி முன்னோட்டம்

    மலையாள திரையுலகம் மட்டுமின்றி, தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு நடிகர் தான் நிவின் பாலி.

    தொழில்நுட்ப நிறுவனத்தில், பெரும் சம்பளத்திற்கு வேலையில் இருந்த நிவின், நடிப்பு மீதிருந்த ஆர்வத்தால், அதை உதறி விட்டு, சினிமாவிற்குள் நுழைந்தார்.

    'மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்' என்ற திரைப்படம் மூலமாக திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

    அவரின் நடிப்பு பலருக்கும் பிடித்து போகவே, அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது. ரசிகைகள் மட்டுமின்றி, ரசிகர்களும் அவருக்கு ஏராளம்.

    அதன்பின்னர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், 'நேரம்' என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானார்.

    'நேரம்' படத்திற்கு பிறகு, அவர் அடுத்ததாக 'ப்ரேமம்' திரைப்படம் மூலமாக இந்தியா முழுவதும் பிரபலமானார்.

    card 2

    தொடர்ச்சியாக தோல்வி படங்கள்

    மிகையில்லாத நடிப்பும், பக்கத்துக்கு வீட்டு பையன் போன்ற தோற்றமும் அவரை ரசிக்க வைத்தது. தொடர்ந்து வித்தியாசமான படங்களை தேர்வு செய்யும் முயற்சியாக, 'ஹே ஜூட்' என்ற படத்திற்காக உடல் எடையை கூட்டினார்.

    ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. அதன் பின்னர், அவரால் எடையை குறைக்க முடியவில்லை. இருந்தும் அதே எடையுடன் ஓரிரு படங்களில் நடிக்க அவையும் தோல்வியடைந்தன.

    தன்னுடைய எடை தான் காரணமாக இருக்குமோ என தற்போது முயற்சி செய்து எடையை குறைத்து, 'ராமசந்திரன் பாஸ் அண்ட் கோ' என்று படத்தில் நடித்துள்ளார்.

    ஆனால், அதுவும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இப்படி தொடர்ச்சியாக தோல்வி படங்களை தருவதால், அவரின் ரசிகர் ஏமாற்றமடைந்துள்ளனர்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மலையாள திரையுலகம்
    நடிகர்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மலையாள திரையுலகம்

    படப்பிடிப்பின்போது நடிகர் பிரித்விராஜிற்கு காயம்; இன்று அறுவை சிகிச்சை என தகவல்  நடிகர்
    ஜெயிலர் vs ஜெயிலர்; ஒரே தலைப்பில், ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்  ஜெயிலர்
    நடிகர் துல்கர் சல்மான் பிறந்தநாள்: அவர் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படங்கள் துல்கர் சல்மான்
    'பிரெண்ட்ஸ்' பட இயக்குநர் சித்திக் உடல்நிலை கவலைக்கிடம்; ECMO பொறுத்தியுள்ளதாக தகவல் வடிவேலு

    நடிகர்

    ரசிகர்களின் சாக்லேட் பாய் என்றழைக்கப்படும் நடிகர் மாதவனின் பிறந்தநாள்!  பிறந்தநாள்
    கார்த்தியின் அடுத்த படத்தில் இணைகிறாரா அரவிந்த் சுவாமி? இணையத்தில் வைரலாகும் புதுத்தகவல் கார்த்தி
    ட்விட்டரில் இருந்து விலகியது ஏன்? பதில் கூறிய நடிகர் சித்தார்த்!  வைரல் செய்தி
    நடிகர் பிரபாஸ் திருமணம் குறித்து அவரே வெளியிட்ட புதுத்தகவல்;  கொண்டாட்டத்தில் ரசிகர்கள்  பிரபாஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025