NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / இப்போது ரூ.2 லட்சம் இருந்தால் ஷாருக்கான் வீட்டில் நீங்கள் தங்கலாம்! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இப்போது ரூ.2 லட்சம் இருந்தால் ஷாருக்கான் வீட்டில் நீங்கள் தங்கலாம்! 
    ஒரு இரவு தங்குவதற்கு ₹2 லட்சம் வாடகை என தெரிவிக்கப்பட்டுள்ளது

    இப்போது ரூ.2 லட்சம் இருந்தால் ஷாருக்கான் வீட்டில் நீங்கள் தங்கலாம்! 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 21, 2024
    12:22 pm

    செய்தி முன்னோட்டம்

    ஷாருக்கானின் புகழ்பெற்ற மும்பை வீடான மன்னத்-ஐ பார்க்க வேண்டும் என்பது நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ரசிகர்களின் கனவு ஆசை, லட்சியம் எல்லாம்.

    இருப்பினும், ஷாருக்கிற்கு அந்த வீடு மட்டுமே ஒரே சொத்து இல்லை.

    அமெரிக்காவின் பிரபலமான ஏரியாவான பெவர்லி ஹில்ஸ்-இல் அவருக்கு சொந்தமான மாளிகை போன்றொரு ஆடம்பர வீடு உள்ளது.

    அந்த வீட்டில் ஒரு இரவு தங்குவதற்கு ₹2 லட்சம் வாடகை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மாளிகையில் ஜக்குஸிகள் மற்றும் தனியார் கபனாக்கள் உட்பட ஆடம்பரமான வசதிகளுடன் ஆறு படுக்கையறைகளும் உள்ளது.

    வில்லா அம்சங்கள்

    ஷாருக்கானின் பெவர்லி ஹில்ஸ் மாளிகையில் உள்ள ஆடம்பரமான அம்சங்கள்

    ஆர்கிடெக்சுரல் டைஜஸ்ட் படி , ஷாருக்கானின் பெவர்லி ஹில்ஸ் சொகுசு பங்களா என்பது பழமையின் ஆச்சரியங்களும் மற்றும் நவீன தலைசிறந்த படைப்புகளின் கலவையாகும்.

    ஓவிய அறையில் பழுப்பு நிற சோபா செட்கள், புகைமூட்டி மற்றும் புத்தக அலமாரி ஆகியவை அழகிய ஓவியத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

    இந்த வில்லா வெள்ளை மற்றும் பழுப்பு வண்ணத் நிறங்களை பின்பற்றுகிறது.

    கண்ணாடிகள் மற்றும் பிரமாண்டமான சரவிளக்குகளால் வில்லா முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    மேலும் குளியலறைகள் கிளாசிக் மற்றும் சமகால பாணிகளின் சரியான கலவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

    இந்த வீடு சாண்டா மோனிகா, ரோடியோ டிரைவ் மற்றும் மேற்கு ஹாலிவுட்டில் இருந்து 5 நிமிட தூரத்தில் அமைந்துள்ளது.

    அறிக்கை

    பெவர்லி ஹில்ஸ் மாளிகை பற்றி ஷாருக் கூறுவது என்ன?

    2017இல், ஷாருக்கான் இந்த வில்லாவில் தங்கியிருந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

    வெளியுலகத் தொடர்பைத் துண்டிக்கவும், தனக்காக சிறிது நேரம் செலவிடவும் வீட்டைப் போன்ற இடம் எதுவுமில்லை" என்று அவர் கூறினார்.

    "நகரத்திலிருந்து பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள வேகமான வாழ்க்கை முறையிலிருந்து விடுபடுவது ஒரு புத்துணர்ச்சியூட்டும் அனுபவமாக உள்ளது."

    இந்த வீட்டில் நடிகர் தனது குடும்பத்தினருடன் தரமான நேரத்தை செலவிட்டதாகவும், 'ஜப் ஹாரி மெட் செஜல்' படப்பிடிப்பின் போது அங்கேயே தங்கியதாகவும் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஷாருக்கான்
    ஷாருக் கான்
    மும்பை

    சமீபத்திய

    பண மோசடி வழக்கில் குஜராத் சமாச்சார் பத்திரிகையின் உரிமையாளரை கைது செய்தது அமலாக்கத்துறை அமலாக்கத்துறை
    கோடிங் எழுத ஏஐ இருக்க பொறியாளர்கள் எதற்கு? 6,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது மைக்ரோசாஃப்ட் மைக்ரோசாஃப்ட்
    இந்தியாவின் வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 5.1% ஐ எட்டியுள்ளது இந்தியா
    ஸ்விக்கி Students Rewards திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை தெரிந்துகொள்ளுங்கள் ஸ்விக்கி

    ஷாருக்கான்

    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகரின் 'கடைசி ஆசையை' நிறைவேற்றிய ஷாருக்கான்! ட்விட்டர்
    பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வீட்டிற்கு படையெடுத்த ஸ்விக்கி டெலிவரி பாய்ஸ்! ஏன் தெரியுமா? ஷாருக் கான்
    விபத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு காயம்; அறுவை சிகிச்சை செய்ததாக தகவல்  பாலிவுட்
    ஷாருக்கான் நடிப்பில், ஜவான் படத்தின் 'prevue' வீடியோ வெளியானது  பாலிவுட்

    ஷாருக் கான்

    அட்லீ- ஷாருக்கான் 'ஜவான்' திரைப்படத்தின் தணிக்கை குழு பரிந்துரை வைரலாகி வருகிறது ஷாருக்கான்
    சென்னையில் நடைபெற்ற ஜவான் இசைவெளியீட்டு விழா சிறப்பம்சங்கள்  இசை வெளியீடு
    ஜவான் திரைப்பட ட்ரைலர் வெளியானது  ஷாருக்கான்
    ஜவான் படவெற்றிக்காக திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த ஷாருக்கான் மற்றும் நயன்தாரா திருப்பதி

    மும்பை

    மும்பை BKC-யில் புதிய அதிவேக சார்ஜிங் ஸ்டேஷனை அமைத்த ஆடி ஆடி
    ஜனவரி 18 வரை, மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது  காவல்துறை
    ஜார்கண்ட் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த மாவோயிஸ்டுகள் மாவோயிஸ்ட்
    பிரான்சில் கடந்த 4 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட பயணிகள் விமானம் இன்று மும்பை வந்து சேர்ந்தது  விமான நிலையம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025