Page Loader
'அயலான்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் 
'அயலான்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்

'அயலான்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் 

எழுதியவர் Nivetha P
Nov 30, 2023
07:23 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சயின்ஸ் பிக்க்ஷன் படமாக தயாராகி வரும் நிலையில், 2 ஆண்டுகளுக்கு மேலாக இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பினையும் அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்படி, இப்படத்தின் 2ம் சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளது என்று தெரிகிறது. மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 26ம் தேதி நடைபெறவுள்ளது என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு